உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பவழபஸ்பம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பவழபஸ்பம்

43

கத்தினிடம் அதிகம் பேச நேரமில்லை. நினைப்போ என் மாட்டுளது. அந்த நேரிழையாளின் மனை செல்ல; விரைவாகத் தேரை நீ செலுத்து! உனக்குத்தான் திறமை உண்டே! பாகா! செலுத்து! அந்த மனையின் கண்ணே, அக மகிழ்வுடன் அன்னங்கள் விளையாடுகின்றன; பெடையும் ஆணும், பெருமிதத்தோடு ஆடுகின்றன. தூய்மையான சிறகு, அந்த அன்னங்கட்கு, வெண்மை, அழகான வெண்மை நிறச் சிறகுகள். பெரிய தோள்களையும் மெல்லிய விரல்களையும் உடைய, ஆடை ஒலிப்பவள், நீர்த்துறையிலே, ஆடையிலே தோய்ந்துள்ள கஞ்சிப் பசையினை அலசிவிடுவது கண்டுள்ளாயன்றோ! அதுபோன்ற நிறம், அன்னங்களின் சிறகுக்கு!! அவை ஆணோடு பெண் அளவளாவி, அகமகிழ்கின்றன! காதல் இன்பத்தை அவை நுகரக்கண்டு, என் அன்னம் பச்சைக்கிளியுடன் பேசுகிறாள். பாகனே! செலுத்துக தேரை விரைவில்! என் நெஞ்சமோ நோகிறது! காதலின் மேம்பாட்டை, காதலின் பெருங் குணத்தை நான் கண்டேன் ஈண்டு. என் இச்சைக்கிளியாளைப் பச்சைக் கிளியுடன் பேசி ஏங்கிட விட்டுப் பாவியேன், பரிதவித்தேன். தெளிந்த நீர் தழுவிச் செல்லும் மணற்கரையிலே, பெண் மான் படுத்துறங்கக், கனிவுடன் காவல் புரியும் ஆண்மானைக் கண்டேன். அதன் பெருந்தன்மையினைக் கண்டு எனது நெஞ்சம் தளர்ந்துளது. அறுகு அருந்தச் செய்து, அருவியோரத்தில் அழகுறத் தூங்கச் செய்து, ஆண்மான், துயிலும் தன் பெண் மானுக்குத் துணைநிற்பது கண்டேன்; துக்கம் நெஞ்சைத் துளைக்கிறது; என் துடியிடையாளை நான் தனியே தவிக்கவிட்டேன். அவள் தத்தையைக் கேட்கிறாள், 'இன்று அவர் வருவாரோ, கூறு' என்று. அந்த மனைக்கு விரைந்து சென்று, அவள் துயர் தீர்த்துத், தளர்ந்த என் நெஞ்சம் இன்பம் பெறச் செய்யவேண்டும். வேகமாகத் தேர் செலுத்தும் திறமையுடைய பாகனே! தேரை, விரைந்து செலுத்து!!"

வினைமுற்றிய தலைவன் தேர்ப்பாகனுக் குரைத்தது, நான் மேலே தீட்டியிருப்பது. மதுரை மருதன் இளநாகனார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவழபஸ்பம்.pdf/44&oldid=1638983" இலிருந்து மீள்விக்கப்பட்டது