பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21


என் அருகில் இருந்த நாய் அங்கேயே பார்த்துக் கொண்டிருந்தது. அவர்கள். வீடு கண்ணுக்கு மறைந்த பிறகும் கூட வண்டி வேறு சந்தில் திரும்பிய பிறகும் கூட, அதன் பார்வை திசைமாற வில்லை. என் வீட்டிற்கு வரும் வரையில் அதன் கழுத்து காரின் பின் பக்கம் திரும்பியபடியே இருந்தது.

நான் வண்டியை விட்டு இறங்கி வீட்டுக்குள் நுழைந்தேன். 'சிவாஜீ'என்று அழைத்தேன். வண்டியிலிருந்து குதித்து என் பின்னால் வந்தது.

நான் சாய்வு நாற்காலியில் போய்ச் சாய்ந்து கொண்டேன். புதிய சிவாஜி என்னைத் தொடர்ந்து வந்து அந்த நாற்காலி ஒரத்தில் படுத்துக் கொண்டது. அதன் கண்கள் வாசல் பக்கத்தையே பார்த்துக் கொண்டிருந்தன.

வேலைக்காரன் மோர் கொண்டுவந்தான், நாய் அழகாயிருக்கிறது என்று பாராட்டினான். பிறகு நான் என் வேலைகளைப் பார்க்க வெளியில் சென்றேன் பகல் உணவுக்கு வீட்டுக்கு வந்தேன்.