பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24


இங்கிருந்தால் அது இறந்து போகும்” என்றேன்.

அவர் தலை குனிந்தார். விதியை நோக்கி நடந்தார். சிவாஜி பின் தொடர்ந்தது.

ஒரு நல்ல பணி செய்த நிறைவு என மனத்தில் ஏற்பட்டது.

வந்தவரை வரவேற்று மோர் கூடக் கொடுத்து உபசரிக்காமல், சினந்து பேசியனுப்பி விட்டேனே என்ற உணர்வு பிறகு தான் எனக்குத் தோன்றியது.

யாரிடமாவது நாய்க்குட்டி யிருந்தால் சொல்லுங்கள். நானே வளர்க்க ஆசைப் படுகிறேன்.