பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஏரிக்கரையில் பேய்
உடம்பெல்லாம் வேர்த்து விறுவிறுத்து மூச்சு முட்ட அந்தக் கிழவர் ஓடோடி வந்தார். ஏரிக் கரைக்கு பெர்ரிப் பழம் பறிக்கச் சென்றவர் சிறிது நேரத்தில் இப்படி ஒடி வந்தார். அவர் கண்களில் மருட்சி தெரிந்தது. எதையோ கண்டு பயந்து ஓடி வந்ததுபோல் இருந்தது. சிற்றுார் மக்கள் கூட்டம் கூடி விட்டனர்.

“தாத்தா! என்ன ஆயிற்று! ஏன் பயந்து ஓடி வருகிறீர்கள்?” என்று ஆளுக்கு ஆள் கேட்டார்கள்.

“பேய்! பேய்!” என்று கூவிய கிழவர் மூர்ச்சித்து மயக்கம் போட்டு விழுந்து விட்டார்.

அவர் முகத்தில் தண்ணிர் அடித்தார்கள். சற்று நேரத்தில் மயக்கந்தெளிந்து கண்விழித்தார்.