பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

‘பேய்! பேய்! என்னைக் கொத்தி விட்டது காலைப்பாருங்கள்” என்றார் கிழவர்.

கால் சட்டை பொத்தல் பொத்தலாக இருந்தது. காலிலும் இரண்டொரு இடத்தில் ஊசி குத்தியதுபோல் இருந்தது. சிறிது இரத்தமும் வெளியில் வந்து காய்ந்திருந்தது.

“என் காலைப் பேய் கொத்தியது, கால் சட்டைகிழிந்து விட்டது! நான் உயிர் தப்பி ஓடிவந்து விட்டேன்!” என்றார் கிழவார்.

கிழவர் சொல்வதை யாராலும் நம்ப முடியவில்லை. பொதுவுடைமைக் கட்சிக் காரர்கள், புரட்சி அரசை ஏற்படுத்தி இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆட்சிக்கு வந்தவுடனேயே நாட்டில் இருந்த பேய்களையெல்லாம், வெடிவைத்துச் சுட்டுப் பொசுக்கி விட்டார்கள். எல்லாப் பேய்களும் ஒழிந்து போய் விட்டன. இது வரை கடந்த இருபது ஆண்டுகளாக யாரும் பேய்கள் இருப்பதாகச் சொல்லவில்லை. அப்படி யிருக்க இந்தக் கிழவர் பேயைப் பார்த்ததாகச் சொல்லுவதை யார் நம்ப முடியும்?