பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

விட்டது. மஞ்சளும் சிவப்புமான இறக்கைகளுடன் கூடிய அந்தப் பறவை மனிதர்களை அடித்து வீழ்த்தும் ஆற்றல் உடையது. காண்பவர்கள் தகவல் கொடுக்க வேண்டும் என்று” என்றார்.

மறுநாள் காலையில் உயிர்க்காட்சி சாலைக்குச் செய்தியனுப்பப் பட்டது. பெரிய வலைகளுடன் கூடிய சரக்குப் பேருந்தில் ஆட்கள் வந்து இறங்கினார்கள். சுற்றி வளைத்துக் கொண்டு அந்தப் பெலிகன் பறவையை வலைக்குள் விழும் படி விரட்டினார்கள். வலையில் அகப்பட்ட பறவை அதே சரக்குப் பேருந்தில் உயிர்க்காட்சி சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. புறப்படும்போது அந்தப் பெலிகன் பறவை, செய்தியாளர்களைப் பார்த்துச் சீறியது.

பேய்ப் பீதியைக் கிளப்பிவிட்ட கிழவருக்கு வீண் வதந்தியைப் பரப்பியதற்கான தண்டனை கிடைத்திருக்க வேண்டும்.

ஆனால், தப்பிச் சென்ற பறவையைப் பிடிப்பதற்குத் தகவல் கொடுத்ததற்கான பரிசு கொடுக்கப்பட்டது.