இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
40
யானார்கள். எப்படி நடிக்க வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள்.
அமைச்சர் கூடத்திற்குள் நுழைந்தவுடன், அவருக்கு ஒரு நாற்காலி போட்டு உட்கார வைத்தார்கள். மூன்று பேரும் அடக்கஒடுக்கமாக வணங்கி நின்றார்கள்.
‘ஆடை உருவாக்கி விட்டீர்களா?’ என்று அமைச்சர் கேட்டார்.
பெருமானே, இதோ எடுத்துவருகிறோம் என்று மூன்று பேரும் கிளம்பினார்கள். ஒரு மேசையின் மேல் மடித்து வைத்துள்ள ஆடையை எடுத்து விரிப்பது போல், பத்தன் நடித்தான். விரித்துப் பிடித்த போது தரையில் பட்டுவிட்ட துணியைத் தூக்கிப் பிடிப்பது போல் சித்தன் நடித்தான். காற்றில் பறந்துவந்த தூசி துணியின் மேல் பட்டது போல அதை அங்கங்கே தட்டிவிடுவது போல் நடித்தான் சித்தன்.
அமைச்சர் கண்ணுக்கு இவர்களுடைய நடிப்புத் தெரிந்ததே தவிர துணி தெரியவே இல்லை. துணியிருந்தால் அல்லவா தெரியும்!