பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53


பொறுப்புள்ளவனாய் வளர வேண்டும். என்னுடைய சொத்துக்கள் எல்லாவற்றையும் மேற்பார்த்துக் காப்பாற்றிவைத்துக் கொள்ள உனக்கு உலக அனுபவம் வேண்டும். அவ்வப்போது நிலைமைக்கு ஏற்ப முடிவு எடுக்கும் திறமையை நீ பெற வேண்டும். ஆகவே மகனே நீ இப்போது உலகப் பயணம் மேற்கொள். உலகில் உள்ள பல நாடுகளுக்கும் சென்று உலக அனுபவம் பெற்றுவா. எங்கு சென்றாலும் நீ தங்கியிருக்கக் கூடிய புகலிடங்களை உண்டாக்கிக் கொள். அப்போது தான் உனக்குக் கவலை ஏற்படும்போதோ, வேறு தேவையுண்டாகும் போதோ அவை பயனுள்ளவையாக இருக்கும்” என்று கூறினார்.

மகனும் நிறையப் பணம் பெற்றுக்கொண்டு உலகச் சுற்றுப்பயணம் புறப்பட்டான்.

பேருந்துகளிலும், சிற்றுந்துகளிலும், புகை வண்டிகளிலும், மின்வண்டிகளிலும் கப்பல்களிலும், வானூர்திகளிலும் தன் விருப்பம் போல் அவன் பல நாடுகளுக்கும் சென்றான். பலவகையான மொழிபேசும்,