பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

நிலையையும், பின் நிகழ்ந்த செயலையும் மெள்ளப் பார்ப்போம். கரும நிகழ்ச்சிகள் அதிசய வியப்புகளாய் விளைந்து விதியின் வேகங்களை விளக்கி வித்தக நிலைகளில் விரிந்து நிற்கின்றன.

உள்ளே கின்ற பிள்ளை நிலை.

முன்பு இராமநாதபுரத்தில் ஜாக்சன் சக்திப்புச் செய்த மேல்மாடத்தில் தானுபதிப்பிள்ளை தங்கித் தவித்து நின்ருர். மன் னன் வெட்டி இறங்கும்பொழுத ஒட்டி உடன்வர முடியாமல் உள்ளம் கலங்கிப் பிள்ளை உள்ளே நின்றதால் மல்லர் வந்து பிடித்துக்கொண்டார். பிடிபட்டுள்ள இப் பிள்ளையைக் கண்ட தும். அவ்வெள்ளையன் வெகுண்டு :இவன் பொல்லாத பாவி; இவ்வளவும் இக் கொடியவன் செய்த கொடுமையே; இப்படு கொலைக்கெல்லாம் இவனே காரணம்” என்று வடுவுரை ய்ாடி வைதிகழ்ந்தான். அங்கனம் எள்ளி இகழவும் பிள்ளை உள்ளம் பொருமல் அவனை எதிர்த்து நோக்கி கெடுகினவோடு கொடு வஞ்சம் புரிந்து படுபழியை வளர்த்துவிட்டு என்மேல் என் அடாப்பழி கூறுகின்ருப்? இது மிகவும் அடாத செயல். கான வருக என்று கரவுடன் அழைத்து வீணரும் கருதாத வெவ் வினையை காணுது செய்தன; அவ்வினைப்பயன் விளைந்தது; முடி வறியாமல் முனைந்து துணிந்து கெடுதி புரிந்தாய்; படுகொலைகள் விழுந்தன; நடுவே நான் என்ன செய்வேன்? எம் ஆண்டகை வெகுண்டெழுந்த பொழுது நீ அஞ்சி ஒடி அயலே ஒளிக்காய். பேடியர்போல் ஒடினன் என உள்ளம் நாணி உன்னைக் கொல் லாது விட்டு அவ்வள்ளல் போனர். அவ் வாள்வாய்க்கு இரை யாகாமல் நாள்வாப் பெற்று இங்கே நண்ணி நிற்கின்ருப். அரசு கல்கிய ஆருயிர் உதவியை அறவே மறந்து அவரது அமைச் சை அவமதிப்பது அவமே. உன்னை உணராமல் என்னை இகழ் தல் ஈனமாகும். எய்திய போரில் இருவரும் அஞ்சி இழித்து கிடந்தோம். கழிந்துபோனதை கினையாமல் இதுபொழுது கதித் துகின்று வல்லவன் போல வாய் பிதற்றுகின்ருய். இனி யாதும்