பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. டேவிசன் வந்தது 109

வீண்வார்த்தை பேசவேண்டாம்; உன்னுடைய மனம்போல ப. து வேண்டுமோ அதைச் செய்துகொள்” என்று இவர் சினந்து பேசவும் அவன் சீறி நோக்கி இக் கொடியவனைச் சிறை யில் போடுங்கள் என்று செயிர்த்துரைத்தான். உடனே சேவகர் புகுந்து இவரைக் கைகளைக் கட்டி கடுத்துக் கொண்டுபோய் அடுத்திருந்த இடத்தில் தனியே அடைத்து வைத்தார்.

விலங்கு பூட்டிப் பிள்ளையை இங்கனம் கடுஞ்சிறையில் வைக்கவும் கொடுத் துயருடன் உள்ளேஅவர் கொதித்திருந்தார். பிள்ளை பிடிபட்டுள்ளதை நினைந்து உள்ளுற உவந்திருந்த ஜாக்சன் துரை மேலே கும்பினி அதிபதிகளுக்கு அ ங் கு நிகழ்ந்த கொடும்போர் விளைவையும், கொலை நிலைகளையும் குறித் துத் தன் பக்கம் அனுகூலமாகச் சதுரோடு கழுவி எழுதினன். அன்று அவன் எழுதிய படியை அடியில் பார்க்க.

பாஞ்சாலங்குறிச்சிப் பாளையகாரளுகிய கட்டபொம்மு நாயக்கன் என்னைப் பேட்டிகான வருவதாகப் பாவனை காட்டி 4000 போர்வீரர்களுடன் வந்து இராமநாதபுரத்தில் தங்கிப் படைகளை அயலே மறைய வைத்துவிட்டு நாளது செப்டம்பர் மாதம் ஒன்பதாங்கேதி (9–9–1798) மாலை 5 மணிக்கு என் னைக் கண்டுகொள்ளவேண்டும் என்று ஆள்மூலம் சொல்லி அனுப்பினன். அந்த ஆள் இடம் மறுகாள் காலை 10 மணிக்கு வந்து காணலாம் என்று நான் நேரே பதில்சொல்லி விடுத்தேன்.

அவ்வாறே குறித்த காலத்தில் அவனும், அவனுடைய தம்பி ஊமையும், கானுபதியும், படைவீரர் சிலரும் அடைவாக வந்தனர். வரவே அவனே உரிமையோடு இருக்கச்செய்து நம் ஆட்சிக்குரிய வ ரி ைய ச் செலுத்தவேண்டிய முறையைக் குறித்து உரைத்தேன். ஒன்றுக்கும் சரியான பதில் சொல்லாமல் உள்ளஞ் செருக்கி ஊக்கமொடு பேசினன். கண்ணியம் வாய்ந்த கம் கும்பினி ஆளுகையை மதியாமல் திண்ணியனுப் நின்று நாளும் அவன் செய்துவரும் தீங்குகளையெல்லாம் தெளிவுற எடுத்துக்காட்டி இனிமேல் பாங்குடன் அடங்கி கடந்துவரும் படி பண்போடு கூறினேன். அங்ங்னம் இதமாக நான் கூறி வருங்கால் அவன் மதம் மீறித் திடீர் என்று திமிரி எழுந்து