பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

விசாரித்துக் குதுகலக்கோடு குலாவி அமர்ந்தார். அதன் பின்

பிள்ளையைப் பார்த்து இவ் வள்ளல் தாண்ட அவர் உள்ளம்

உவந்து அங்கே உற்ற நிலைகளை எல்லாம் மேலே சொல்லலாஞர். தானுபதி தப்பி வந்தமை சொன்னது.

இராமநாத புரத்தில் போர் மூண்ட பொழுது மேல் மாடத்தில் நான் பொறிகலங்கி கின்றேன். நீங்கள் பொருது வென்று போகவும் அருகு கின்ற மல்லர்கள் இறுக வந்து என்னைப் பிடித்துக்கொண்ட ார். நான் மறுகி யிருந்தேன். போரில் வெருவி ஒளிந்த ஜாக்சன் பிறகு வக்து என்னேக் கண் டான்; என் உயிரைப் பருகிவிடுபவன் போல் படு சினங்கொண் டான். கொடுமையாக வடுவுரைகளாடி என்னே வைதிகழ்க்கான். நானும் எதிர்த்துப் பேசினேன்; பேசவே அவன் கொதித்து எழுத்து என்னேக் கொடுஞ் சிறையிலிட்டுப் பட்டினி போட்டுப் பதைக்கச் செய்தான். வாரம் இரண்டு கழிக்கபின் என்னேக் திருச்சிராப்பள்ளிக்கு அனுப்பினன். அவனும் டன் வக்கான், அங்கே துணைப்பலம் கொண்டு அவன் துணிவுற்று நின்ருன். அயலிடம் ஆயிற்றே! என்ன நேருமோ? எ ண் நான் எங்கி யிருக் தேன். குறித்த காலம் வந்தது. கும்பினித் கலேவர்கள் எங்கள் இருவரையும் எதிர் நிறுத்தி நிகழ்க்கதை உசாவி நீதி விசாரணை

செய்தனர். நியாய வாதங்கள் செறிமுறையே கடந்தன.

முகவில் ஜாக்சன் எழுந்து தனக்கு அனுகூலமாகவும், கம் இடத்துக்கு இடையூருகவும், சமர்த்துடன் அமைத்துப் பேசி ஞன். பின்பு என்மேல் பிழைகளே ஏற்றிப் பெரிதும் துளற்றின்ை. எல்லா வம்புகளும் என்னுலேதான் விளக்துள்ளன என்றும், வெள்ளையரை இகழ்ந்து அல்லல் பல செய்கின்றேன் என்றும், பொல்லர்தவன் என்றும், மூண்ட சண்டைக்கு மூலகாாணம் நானே என்றும் என்னேக் கொலேத் தாக்கில் இடும்படியான நிலையில் பழிகளைக் தாக்கி என்கலையில் சுமத்தினன். அவன் கூறிய சொற்களைக் கேட்டதும் துரைகள் எல்லாரும் பற்களைக் கடித்து