பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்.

இவன் கேட்டு வியந்தான்; தான் கோட்டை அமைத்துக் குடியிருக்கற்குரிய இனிய இடம் அதுவே யாம்எனத் தன்னுள் விழைந்துகொண்டான். விழைவு நாளும் கழைவு கொண்டது. விழுமிய மேன்மை கெழுமி வந்தது. வேட்டைக் காட்சியில் வேட்கை மீதார்ந்து வந்தவன் கோட்டை சமைக்கக் குறிக் கொண்டு நின்ருன்.

கோட்டை வளைந்தது.

திங்கள் சில கழிக்கபின், நல்ல ஒரையில் நாட்செய்துகொண்டு செல்ல நகரைச் சீருடன் அமைத்தான். மாடமாளிகைகள், கூடகோபுரங்கள், ம ணி ம ண் ட ப ங் க ள், ஆடரங்குகள், அம்பலங்கள், பாடல் நிலையங்கள், கோவில்கள், யாஜனக் சேமங்கள், குதிரை லாயங்கள், முதலிய யாவும் அழகும் அமைத்துக் கோட்டை வளைத்துக் கொத்தளங்கள் குயிற்றித் கன் பாட்டன் பெயராகிய பாஞ்சாலன் என்பதையே பண் புடன் காட்டிப், பாஞ்சாலன்குறிச்சி எனப் பெயர் சூட்டி நல்ல நாளில் பல்வகைக் கிளைகளும் பக்கம் சூழ அச்செல்வ நகருட் குடிபுகுந்து இவன் சிறந்து வீற்றிருந்தான். அப் புதிய நகரில் அதிக ஆடம்பரங்களோடு அதிபதியாய் இவன் குடியேறியது கொல்லம் ஆண்டு 276ம் வருடம், வைகாசி மாகம், திங்கட் கிழமை மங்களமான சிங்க லக்கினத்தில் என்க.

குடி புகுந்தது.

கொல்லம் ஆண்டு என்பது இந் நெல்லை மண்டலத்தில் வழங்கிவருகிற கா லக்குறிப்பு. சேரர் எல்லையிலுள்ள கொல்லம் என்னும் ஊர் கோன்றிய நாளில் இருந்து அதன் பேரால் இங்கனம் கணிக்கப்பட்டு வருகின்றது. இது கி. பி. ஆண்டுக்கு 825 வருடங்கள் பிந்தியதாம். ஆகவே ஆதிக் கட்டப்ொம்மு காயக்கர் பாஞ்சாலங்குறிச்சியை அமைத்து அதில் முத ன் முகல் குடி புகுக்கது கி. பி. 1101ம் ஆண்டு என்பது தெளிவாம்,