பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. கயத்தாறு புகுந்தது 315

மல், எப்பொழுதும் பட்டாளங்களையே நடத்திப் படு போர்க ளாற்றிக் கொடுமையாய்ப் பழகி நின்றவர்களையே தனக்கு உரிமையாக் குறிக்கெடுத்துத்துணையாஅணைத்திருந்தான்.அவருள் ologit stuffl-L-lysol (Major Robert Turing), gmisèg ஹ-யெஸ் (Jeorge Hughes) என்ற இருவரும் அவனுக்கு அக்தரங்க நண் பராய் அமர்ந்திருந்தார். இக் குலமகனைக் குறித்துத் தன் துணை வர்களான அத் துரைகளிடம் பல குறைகளைக் கொழித்துப் பழித்துக் கூறினன். கட்டபொம்மு என்பவன் மிகவும் துட் டன்; மூர்க்கன்; யார்க்கும் அடங்காதவன்; எ ப்பொழுதும் போர்க்கே துணிந்தவன்; பொல்லாத வலியினன்; வெள்ளைய ரெல்லாரையும் எள்ளி இகழ்ந்து இறுமாந்துள்ளவன், கும்பினி யாரது ஆணைக்கு அடங்காமல் அகங்கார ங்கொண்டு கன் ஆணையை எங்கும் நாட்ட எண்ணிப் பொங்கி நின்ருன். கலைமை யான சுதந்தர நிலைமையையே கிரந்தரமாக நினைக்துள்ளான். வரி தர மறுத்து வம்புகள் புரிந்தான்; கலெக்டர்களையும் என் ஆனயும் அவமதித்து இகழ்ந்தான். தனது கானுபதிப் பிள்ளையை விடுத்துக் கும்பினி நெல்லைக் கொள்ளை படித்து வரச் செய்தான். குடிகளிடம் கோள் மூட்டி நமக்கு உள்ளடங்கி இருந்தவரை யும் மெள்ள உலைத்து விடுத்தான். பிழைக்க வந்தவர் என நம்மை இளித்து நின்றன். அழைத்துவரப் போன கம்முடைய படை களை யெல்லாம் அழித்துத் தொலைத்தான். அல்லல் பல செய்து, எல்லை கடந்து, கொல்லே விளைத்துள்ள இவனே அழித்துத் தொலைத்தால் அன்றி நாம் இந் நாட்டில் சுகமாய் கிலேத்திருக்க முடியாது. கும்பினி ஆட்சிக்குக் கொடிய இடையூருப் கெடிது நிற்கின்ற இவனே அடியோடு அழித்து ஒழிப்பதே நாம் இங்கே குடியேறி இருப்பதற்கு அடி கோலிய படியாம்' என இவ் வாறு முடிவாக மூட்டி, இவர்மேல் எவர்க்கும் கெடு நினைவை

ஊட்டிக் கொடுமையில் ஊக்கி அவன் கடுமையாப் கின்ருன்.

இவ் விர மன்னன் ஒருவனே அடக்கிவிட்டால் இங் நாடு முழுவதும் அஞ்சி அடங்கிவிடும் என்று அவன் நெஞ்சம் துணிந்து கின்ருன் ஆதலால் இக் காட்டில் உள்ள பாளையகாரர்