பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்.

உவந்துகுழ நல்ல ஒர் நாளில் அச்செ ல் ல ம க னுக் கு வீரபாண்டியன் எனப் பேரிட்டு விழாக்கொண்டாடினர்.

வீரபாண்டியன் விளைந்தது.

இ க் .ெ த ன் பாண் டி காடடில் வீரத்தை நிலைநாட்டிப் பாஞ்சாலங்குறிச்சியை உலகமெங்கும் இன்றும் என்றும் யாரும் வியந்து புகழும்படி விளக்கி வெற்றிவீரனப் விளங்க நிற்கும் இளங்குமானுக்குப் பெற்ருேர் அன்று இட்ட பெயர் பெரிதும் உரிமையாய்ப் பொருந்தியிருந்தது. பாண்டிநாடு வீர முடையதென யாண்டும் புகழ இவ் ஆண்டகை நீண்டிருக்கமை யால் வீரபாண்டியன் என்னும் இயற் பெயர் காரணப்பெய ராய்க்கருககின்றது. பேரின்சீர் வீரநீர்மையை விளக்கியுள்ளது.

ஊமையன் உற்றது.

இத்திருமகன் பிறந்து ஆண்டு ஒன்பது கழிந்தபின் மீண்டும் ஒரு மகன் பிறந்தான். அவனுக்குக் தளவாய்க்குமாரசாமி, என்று பெயரிட்டார். அச்சேய்க்கு வாய் சிறிது கொன்னல் உண்டு; அதனல் யாரோடும் அதிகம் பேசாமல் பெரிதும் மெளனமாய் இருந்து வங்கமையால் ஊமத்துரை என நின்ருன். இவன் யாரும் நேரிலாப் பேராண்மையாளன். இவனது பேராற்றலும் போராற்றலும் ஒராற்ருலும் முழுதும் உரைத்தல் அரிதாம். இக்காட்டை ஊமையன்சீமை என இன்றும் உலகம் சொல்லிவருவதினுல் அன்று இவன் புரிந்துள்ள அரசியல் முறையும் அருந்திறலும் பெரும்போர் வீரமும் தலைமையும் நிலைமையும் இனிது புலனும்.

துரைச்சிங்கம் தோன்றியது.

இவனுக்குத் தம்பியாகப் பின்பு ஒரு புதல்வன் பிறந்தான். அவனுக்குத் துரைச்சிங்கம் என்று பெயர். சுப்பையா எனவும் அழைப்பார். முருகன் திருநாமத்தை உரிமையோடு அழைத்து வந்தமையால் இளையவன் இங்ஙனம் செல்லப் பேரால் விளங்கி யாண்டும் வெல்லும் திறலை விளக்கி நின்ருன்,