பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. க வுை ைர

குறிச்சி என்ருல் யாரும் ஒர் விர உணர்ச்சி யுடைய ாய் ஊக்கி எழுவதை நாளும் நாம் நோக்கி வருகின்ருேம். சார்ந்ததன் வண்ணமாகவே மக்கள் யாண்டும் நேர்ந்து நிற்பர் ஆதலால், விரம் கொடை சீலம் கல்விகளில் சிறந்துள்ள மேலோர்க ளுடைய சரிகங்களை அறிவது அவர்க்குப் பெரிதும் உறுதி கருவ தாம். ள்ளம் கருதி வருவது உயிர் வாழ்வில் ஒளிபுரிகின்றது.

“The names and memories of great men

are the dowry of a nation ” "பெரியோர்களுடைய பெயர் கினைவுகள் ஒரு தேசத்துக்கு உயர்நலமான உரிமைச் செல்வம் ” என்னும் இந்த அருமை வாசகம் இங்கே கருதி யுனா வுரியது.

மேல் நாட்டார் தங்கள் முன்னேர்களுடைய சரித்திரங்களை எவ்வளவு மேன்மையாக மதித்துக் கொண்டாடி வருகின்ருர் என்பது இகளுல் நன்கு தெளிவாம். உயர்ந்த விழுமியோரை கினைந்து உரிமையோடு ஒழுகி வருகிற சமுதாயம் சிறந்த மேன் மைகளை அடைந்து எவ்வழியும் செவ்வையாப்உயர்ந்து வருகிறது. உள்ளத்தளவே மக்கள் யாண்டும் உயர்ந்து வருகின்றர். உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை , அஃதில்லார் மரம் ” (குறள் 600) என்ற கல்ை ஊக்கமுடைமையின் உயர்நிலை புலனும். வீரம் இல்லாக நாடு சாரம் இல்லாத காடு என்னும் பழமொழி விர நீர்மையின் சீர்மையை வீறுடன் விளக்கி யுள்ளது. தலைமையான நிலைமையை விரம் அருளி வருகிறது.

விரர்கள் எ க்காலத்திலும் எந்த காட்டிலும் எல்லாராலும் போற்றப் பெறுகின்ருர். இக்க நாடு விரத்தில் கலை சிறந்திருந் தமை பண்டைப் பனுவல்கள் எவற்றிலும் பாக்கக் காணலாம். அவ் விர மாட்சி கால நீட்சியால் பழங் கனவாய்த் தோன்றி லும் அண்மையில் நிகழ்ந்த இச் சரிதக் காட்சி நம் நாட்டின் உண்மையான திண்மை கிலையை உறுதி பெற உணர்த்தி கிற்கின்றது. இக் காட்டு விரம் எங் நாட்டுக்கும் ஏற்றமாயுளது. தம் ஊரின் பேரரண் வலியால் இப் போர்வீரர் திறல்

பாரறிய கின்றது ஆகலால் இது பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்