பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. வீரபாண்டியக் கட்டபொம்மு. 59

மாடன், முத்து என்னும் பேரினரான அவ் விருவரையும் குறித்த நாளில் பலியிடும்படி சிறையில் இட்டிருந்தார். வலைவாய்ப்பட்ட வன விலங்குகள்போல் பலிவாய்ப் பட்டுப் பதைத்திருந்த அப் பகடைகள் இனத்தவர் பாண்டி நாட்டிலுள்ள பாளையகார ரிடங்கள் தோறும் புகுந்து இடர் நீக்கும்படி பணிந்து கின்று பரிந்து வேண்டினர். 'திருமலை செயலுக்கு மறுமொழி இல்லை' என்று அனைவரும் மறுத்து விடுத்தார். அவர் மறுகி அலைந்து முடிவில் வந்து பாஞ்சாலங்குறிச்சியை அடைந்தார். அவ்வம. யம் அங்கு வீரதளவாய்க்கட்டபொம்மு அரசு புரிந்திருந்தார். அப்போர்வீரரது அடியில் வீழ்ந்து அனைவரும் அழுதுமுறையிட அவர் கடிதிரங்கி கெடிது சூழ்ந்து, முடங்கல் ஒன்று எழுதிச் சேனைத் தலைவரிடம் தந்து, மதுரைக்கு அனுப்பினர். கிருபம் வந்தது. நரபலி இடவேண்டாம்; தேவியின் வர பலத்தாலேயே தங்கள் திருமதில் யாதொருகடையுமின்றிப் பெரு நலமோடு பெருகியெழும்; இத்துடன் வைத்திருக்கும் மஞ்சள் காப்பை மதிலில் இட்டுக் கட்டிப் பாருங்கள்' எனச் சுட்டி யிருக்கும் வாசகத்தை நோக்கித் திருமலை நாயக்கர் பெரு மகிழ்ச்சி யடைந்து அவ்வாறே செய்து பார்த்தார். செவ்வை யாயது. உடனே சிறையிலிருந்தவரை வெளியேற்றிப் பொருளும், உடை யும் கொடுத்து அயலகல விடுத்துப், பாஞ்சைப்பதியிடம் வாஞ் சை மிகுந்து பரிசில் பல அனுப்பிப் பண்பு பாராட்டி அன்பாற்றி கின்ருர் விடுதலை யடைந்த அந்த எளிய குலத்தவர் எல்லாரும் களிமிகுத்து ஒருங்கு திரண்டு பாஞ்சை நகர் அடைந்து, அர சைக் கண்டு, அடிபணிக்தெழுந்து, உயிருகவி புரிந்த அவ்வுப காரநிலையைப் புகழ்ந்துபோற்றி, உலகம் உள்ளவரையும் குடிக்கு ஒரு பண ம் விதம் கோவின்குடிக்கு வருடந்தோறும் காம் கொடுத்துவருவதாகப் பட்டயம் எழுதிக் காணிக்கை வைத்துக் கைகுவித்து வந்தார். அவ்வாறே இன்றும் தந்து வருகின்றர்.

| * பக்கம் 30, 33-வது பட்டம் பார்க்க,