பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

பலாம்? என ஆராய்ந்தார். அறிவுமட்டும் போதாது; அஞ்சாமை யும் ஆள்வினையும் ஆற்றலும் உடையவனே ஏற்றவன் என்று எண்ணிப்பார்த்து இறுதியில் ஜாக் சன் (W. C. Jackson) ஒரு வனே தகுதியானவன் என்று தீர்மானித்தார். அவன் கல்வியறி. வில் அவ்வளவு சிறந்தவன் இல்லை; ஆயினும் போரில் நல்ல பழக்க முள்ளவன். படைகளில் நெடுநாளாகத் தளகர்த்தன யிருந்தவன்; எதையும் அஞ்சாமல் துணிந்து செய்யும் இயல்பினன்; முர ளுன இவரிடம் வந்து காரியக்கை முடிக்கற்கு அவனே பொருத்தம் என ஆராய்ந்து கேர்ந்து அனுப்பி வைத்தார். அனுப்புங்கால் இவரது திறலையும் நிலையையும் தெளிவுற வுணர்த்தி இகமுடன் நெருங்கி வரி வரைந்து முறை புரியும்படி இனிது மொழிந்து விடுத்தார். விடவே, பட்டாளம் ஒன்று பாதுகாவலுக்காக உடன் தொடர்ந்து எழுந்தது. அவன் கலெக்டர் என்னும் பதவி யைப் பெற்று வேண்டிய வசதிகளோடு இப்பாண்டிமண்ட லக்கை யடைந்தான். உரிய சேனைகள் புடைசூழ மேலான வலிமைகளுடன் ஈண்டு மூண்டு வந்து சேர்ந்தாலும் அவனு டைய செஞ்சில் கடுங்கவலையும் நெடுந்திகிலும் கலந்து நின்றன.

சிந்தனை புரிந்தது.

கும்பினி ஆட்சி இக்காட்டில் குலேயாமல் நிலை நிற்க வேண் டுமே என்னும் கவலை நெடிது நீண்டு கின்றமையால் உள் காட்டு வகைகளையும் வெளிநாட்டு நிலைகளையும் கூர்ந்து ஒர்ந்து ஆர்ந்த துணைகளை அவன் தேர்ந்து வந்தான். தென்னுட்டுச் சிங்கம் என எங் நாட்டவரும் புகழ்ந்து போற்ற இசைமிகப் பெற்றுப் பாஞ்சை அதிபதி அருந்திறலாளனுப் அமர்ந்திருப்பதை கினேந்த போதெல்லாம் மனம் மிக மறுகினுன். சினமும் பொரு மையும் தினமும் அவனிடம் இனமாய் வளர்ந்து கனமுடன் விரிந்தன. காலமும் கருமமும் கருதி வருமம் மீதார்ந்து மருமங் களோடு மருவி அரிய சூழ்ச்சிகளை ஆராய்ந்து இருக்கான்,