பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் கள் யாவும் ஒன்றன்பின் ஒன்ருக முறையே பறிபோய்க்கொண் டிருப்பதை அறிக்க தம் அவர் பெரிதும் பரிதாபமாய் வருந்தினர். உள்ளம் கடுத்து அந்த வெள்ளத் தரை ஒரு பெரிய சேனையை அங்கே அனுப்பினர். மேஜர் ஷெப்பேடு(Major Sheppard) என் பவர் அந்தப் படைக்குத் தளபதியாய்ச் சென்ருர். பாணயங் கோட்டையிலிருந்து கிழக்கே பதினறு மைல் தாரத்திலுள்ளது பூரீவைகுண்டம். மார்ச்சு மாதம் பதின் மூன்ருந்தேதி அந்த ஊரை வந்தடைந்த பட்டாளங்கள் தக்க ஆயக்கங்களைச் செய்து கொண்டு மிக்க ஊக்கமாப் மூண்டு போரைத் தொடங்கின. தாம் கவர்ந்து கொண்டிருந்த முற்றுகையைக் கைநெகிழ விடாமல் யாண்டும் பாஞ்சாலங்குறிச்சியார் மூண்டு எதிர்த்தனர். வேண்டியமட்டும் கும்பினிப் படைகள் போராடிப் பார்த்தன. பாதும் பலியவில்லை. மூன்று நாளாக மன்ருடிமுடிவில் பதின ருந் தேதி முறிந்து போயின. 16-3-1801ல் அந்தப் பட்டாளங் கள் உடைக்க பாளையங் கோட்டைக்கு மீண்டன. மீண்ட போ தம் விடாமல் பின் தொடர்ந்து கும்பினிப் படைகளைப் பாஞ்சா லங்குறிச்சியார் அடுதி/மலோடு படுதயர்கள் செய்தனர். கொ டிய புலிகளிடமிருந்த தப்பிய மாட்டு யங்தைகள் போல் அந்தப் பட்டாளங்கள் அல்லல்கள் பல அடைந்து ன ல்லே கடந்து ஓடின. “The enemy annoyed them the whole way.” எதிரிகள் வழிமுழுவதும் பட்டாளங்களைத் தொல்லைப் படுத்தினர்' என்று சேனைக் கலைவன் சொல்லி யுள்ளமையால் அன்று அவர் பட்டுப்போன பாடுகளே உய்த்தணர்ந்த ஒர்ந்து கொள்ளுகிருேம். எவ்வழியில் கண்டாலும் தெவ் வரை வெவ்வலி யோடு வெகுண்டு தாக்கி வருதலால் அவர் வெருண்டு மருண்டு சென்ற இடங்களிலெல்லாம் சிறுமையும் துயரங்களும் அடைந்து உரியவர்களே இழந்த பெரிய இழ வாய் அவர் சீரழிந்து வந்தனர். இவர் வென்றி விறுடன் எங்கும் விளங்கி நின்றனர். பரிவு கொண்டது இக்க வீரர்களுடைய பகைமையை வளர்த்துக் கொண்டது பெரிய தவறு எனக் கும்பினி அதிபதிகளுள் சிலர் கருத நேர்க் தனர். அல்லல் நேர்ந்தபோது நல்ல உணர்ச்சிகள் சிலருடைய உள் ளங்களில் உரிமையோடு இயல்பா ப்த் தோன்.துகின்றன.