பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரஷ்யாவில் நிகழ்ந்த அந்தப் புரட்சியைக் கலியுகம் முடிந்து கிருத யுகம் தொடங்கிய 4க மாற்றமாக, ஓர் யுகப் புரட்சியாகப் பாரதி கண்டது வெறும் கற்பனை நயம்தானா? கவிதா உருவகம்தானா? இல்லை. உண்மையில் பாரதியின் ‘கிருத யுகம்' பற்றிய இந்தக் கருத்துக்கு, ஒரு தர்க்கரீதியான பரிணாம வளர்ச்சியே இருந்திருக்கிறது. அதன் விளைவாகவே அவன் அந்தப் புரட்சியை ஓர் யுகப்புரட்சி என வருணித்துப் பாடினான் என்பதை நாம் பாரதியின் எழுத்துக்களை ஆன்றிப் படித்தால் உணர்ந்துகொள்ள முடியும். அந்தப் பரிணம் வளர்ச்சியை ஆராய்ந்து இனம் கண்டறிவதே இந்தச் சொற்பொழிவின் கருப்பொருளாகும். கலியுகம் தவியுகம் என்பது என்ன? , இத்திய நாட்டுப் பௌராணிகர்கள் உலக வரலாற்றுக் காலத்தை, கிரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம், கிருத யுகம் என நான்கு, யுகங்களாகப் பிரித்துக் கூறினார்கள். இவற்றில் கலியுகத்துக்கு முந்திய துவாபர யுகம் கிருஷ்ணன், பாண்டவர்கள் ஆகியோரின் ஆட்சிக் காலத்தோடு முடிவுற்றது. இதன் பின் கலியுகம் தொடங்கியது. இந்தக் கலியுகத்தில் பொய்யும் புலையும், சூதும் வாதும், மோசடியும் முழுப்புரட்டும், அக்கிரமங்களும் அநியாயங்களும் நிறைந்திருக்கும் என்றும் அவர்கள் கூறினார்கள். அவர்களில் கூற்றுப்படி நாம் இப்போது வாழ்ந்து வரும் யுகம் கலியுகமேயாகும். இந்தக் கலியுகம் எவ்வளவு காலம் நீடிக்கும்? பௌராணிகர்களின் கணக்குப்படி, இந்தக் கலியுகத்தின் மொத்தக் கால அளவு , நான்கு லட்சத்து . முப்பத்திரண்டாயிரம் ஆண்டுகளாகும். பஞ்சாங்கக் கணக்குப்படி, இப்போது நடப்பது கலியுகத்தின் 5097 ஆம் ஆண்டேயாகும். எனவே பெலாராணிகர்களின் கூற்றுப்படி, இந்தக் கலியுகம் முவுவதற்கு நாம் இன்னும் நான்கு லட்சத்து இருபத்தாயிரத்துச் சொச்சம் ஆண்டுகள் வரே காத்திருக்க வேண்டும். சரி. இந்தக் கலியுகம் யாரால், எவ்வாறு முடிவு காணும்? எப்போதெப்போது தருமத்துக்குப் பங்கமுண்டாகி, அதருமம் தலை தூக்கி நிற்கிறதோ, அப்போதெல்லாம் நான் தோன்றுகிறேன்.