பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போன்ற சில பெரியவர்கள் நம்பி வந்தார்கள், அந்த நம்பிக்கை யெல்லாம் காசு பெறமாட்டாதென்பது இப்போது வெட்ட வெளிச் சமாகிவிட்டது. உண்மையை ஒளித்து என்ன பிரயோஜனம் இருக்கிறது? இங்கிலாந்தில் ஆட்சிக்கு வரக்கூடிய எந்தக் கட்சியும் நமக்குப் பிரதிகூலமாய் இருக்குமேயல்லாமல் அனுகூலம்:பிருக்க மாட்டாது என்று எழுதிவிட்டு, ஆனால் சோஷலிஸ்ட் கட்சியோ சீக்கிரம் அதிகாரத்துக்கு வரக் கூடிய தன்று. சாதாரண மாக, பொதுஜனங்கள் கொண்டிருக்கும் கொள்கைக் களுக்கு இக்கட்சி தேர்மாறான கொள்கைகளையுடையது. சோஷலிஸ்டுக் கட்சியாரின் கொள்கைகளிலே சிலவற்றைக் கீழே தருகிறோம்: 1) ராஜா இருக்கக்கூடாது 2) உலகத்தில் தேசத்திற்குத் தேசம் யுத்தங்கள் நடப்பதை யெல்லாம் நிறுத்திவிட வேண்டும் 3) தேச நிலம், தேச ஜனங்களுக்கெல்லாம் பொதுவாய் இருக்க வேண்டும். நிலத்துக்குச் சொந்தக்காரர் சிலரென்றும், நிலமில்லா தவர் சிலரென்றும் . இப்போதிருக்கும் வேறு பாடுகள் பிழையானவை முதலியன.

  • இங்ஙனம் எளிதில் நடக்கக்கூடாத கோட்பாடுகளை உடைய

கட்சியார் ராஜ்யாதிகாரத்துக்கு வருவது சுலபமில்லையல்லவா? என்று எழுதுகிறான். (பாரதி தரிசனம்-முதற்பாகம் பக், 115.116) இந்தக் கட்டுரையில் சோஷலிஸ்டுக் கட்சியார் இந்தியாவின் மீது காட்டி வந்த அனுதாபத்தைப் பாராட்டி எழுதுவதுதான் பாரதியின் நோக்கம். ஆயினும் இதனை முகாந்தரமாகக்கொண்டு, அவள் சோஷலிசக் கொள்கைபற்றியும் சில வரிகள் எழுதி அதனைத் தனது வாசகர்களுக்குத் தெரிவிக்கவேண்டும். எ ன் று கருதியிருக்கிறான் என்பதும் தெளிவாகிறது. எனவே அவன் ஆரம்பத்திலிருந்தே சோஷலிசம் என்ற சமத்துவுக்' கொள்கையில் ஈடுபாடு கொண்டே... இருந்திருக்கிருள். " - - - - இதன்பின் அவன் பாண்டிச்சேரி சென்று அங்கிருந்து தனது 'இந்தியா' பத்திரிகையை நடத்திவந்த ' காலத்திலும், அவன்