பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 இதன் பின்னர் 1920 அக்டோபர் 30 ஆம் தேதியன்று “சுதேசி பூமித்திரன்' பத்திரிகையில் '* 'வெனிஜிலாஸின் கதி என்ற தலைப்பில் எழுதிய அரசியல் குறிப்பிலும், இந்த வெனிஜிலாஸ் மந்திரியைப் போலவே, ருஷ்யாவை நேசக் கட்சிக்கு வாலாக்கி விட முயற்சி செய்த கெரென்ஸ்கி என்ற ருஷ்ய மந்திரியை 'மித்திரன்’ நேயர்கள் மறந்திருக்க மாட்டார்கள் என்ற நம்புகிறேன். ஒருகாலத்தில் கெரென்ஸ்கியை ருஷ்ய தேசத்து நெப்போலியன் என்று சில ஆங்கி வேயப் பத்திராதிபர் முதலியோர் சொல்லி வந்தனர். இன்று அந்தக் கெரென்ஸ்கியின் பெயரையே உலகத்தார் மறந்து விடக் கூ.டி. 4. நிலைமை வந்து விட்டது” என்று எழுதினான் (பாரதி தமிழ்- தூரன், பக். 374) கெரென் ஸ்கியைப் பற்றிய பாரதியின் இந்தக் குறிப்புக்கள் பாரதி ரஷ்யாவில் நிகழ்ந்து வந்த நிகழ்ச்சிகளை எவ்வளவு உன்னில் பாகக் கூர்ந்து கவனித்து வந்திருக்கிறான் என்பதையே நமக்குப் புலப்படுத்துகின்றன. 1915ஆம் ஆண்டில் அவன் “வரவிருக்கும் யுகம்* என்று எழுதிய ஆங்கிலக் கட்டுரையில் சோஷலிசம் ஏற்படுவதையே கிருத யுகத்தின் உதயமாகக் கருதினான் என்று பார்த்தோம். அதைப் போலவே அவன் 1917ஆம் ஆண்டின் பிப்ரவரிப் புரட்சி நடந்து முடித்த பின், அதனை வரப்போகும் நல்ல யுகத்தின் முன் முன்ன்டை பானங்களில் ஒன்றாகவே கருதினான். எனவே ரஷ்ய நாட்டுத் தொழி லாளி மக்களைப்போல் அ வ னு ம் சோஷலிசத்தின் வருகையில் நம்பிக்கை இழக்காமல் அதற்காகக் காத்திருந்தான் என்றே நாம் கூறலாம். இந்த நம்பிக்கையின் காரணமாகத்தான் அவன் பிப்ரவரிப் புரட்சிக்குப் பிள் எழுதியதும், பிங்கள ஆண்டு ஐப்பசி முதல் தேதி என்று, அதாவது 1917ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், சரி யாகச் சொன்னால், ரஷ்யாவில் சோஷலிசப் புரட்சி வெற்றி பெறு வதற்குச் சில நாட்களுக்கு முன்னால், பரலி சு. நெல்லையப்பரால் இதிலுள்ள பாடல்கள் தங்க ஏடுகளில் நவரத்ன எழுத்துக்களால் பொறித்தற்குரியன” எனக் கூறும் முகவுரையோடு வெளியிடப் பட்டதுமான பாரதியின் முரசு”ப் பாட்டில் அவன் தனது சோஷ லிசக் கருத்தை, சமத்துவக் கருத்தை வலியுறுத்திப் பின்வருமாறு t,7டினான் :