பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசாங்கத் தடை மேற்கூறியவற்றிலிருந்து பாரதி தனது 'கனவு', 'ஆறில் ஒரு பங்கு' ஆகிய நூல்களை ஆபத்தில்லாத இரு சிறு நூல்கள்., என்றும், 'கனவு', ஒரு காதல் கவிதை என்றும் 'ஆறில் ஒரு பங்கு' ஒரு *'சமூகச் சீர்திருத்தக் கதை” என்றும் (18-10-1912 அன்று 'ஹிந்து' வுக்கு எழுதிய கடிதம்), ராம்சே மாக்டொனால்டுக்கு எழுதிய கடிதத்தில் இவற்றை முறையே 'ஒரு தீங்கற்ற காதல் கவிதை' என்றும், “'சமூகச் சீர்திருத்தக் குறுநாவல் என்றும் (10-2-1914ல் 'ஹிந்து' வில் வெளிவந்த கடிதம்) குறிப்பிட்டு, எனவே இவை அரசாங்கத்தின் சட்டத்தில் அனுமதிக்க முடியாத கருத்துக்களைக் கொண்டுள்ளன என்று அரசாங்கத்துக்கு எடுத்துச் சொன்னவர்கள் ஏதும் அறியாதவர்கள்” (18-19-1912ல் 'ஹிந்து வில் வெளிவந்த கடிதம்) என்று குற்றம் சாட்டி, இவ்விரு நூல்களை யும் அரசாங்! கம் தடை செய்தது சரியல்ல என்று வாதாடியிருந்தான் என்பதைப் பார்த்தோம். அதே சமயம் திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்றது சம்பந்தப்பட்ட * * திருநெல்வேலி சதி வழக்' கின்போது. மேற்கூறிய இரு நூல்களும் "சிலர் வசம் இருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டதன் காரணமாக, அவர்கள் ஆஷ் கொலை வழக்கில் சம்பந்தப்படுத்தப்பட்டனர் என்பதும், அந்தக் கொலை வழக்கில் அவர்களைச் சம்பந்தப்படுத்துவதற்கு, இந்த நூல்கள் அவர்கள் வசம் இருந்ததே ஒரு காரணமாகப் போலீசாரால் கருதப்பட்டிருக்கிறது என்பதும் பாரதி. மாக்டொனால்டுக்கு எழுதிய கடிதத்தின்மூலம் நமக்குத் தெரிய வருகிறது. பாரதியின் 'கனவு' என்ற நூல் 1910 நவம்பரில் வெளிவந்தது என்று முன்னர்க் கூறினோம் , 'ஆறில் ஒரு பங்கும் ஏறத்தாழ அதே காலத்தில் வெளிவந்திருக்கக் கூடும். பாரதி 1908ஆம் ஆண்டிலேயே சென்னையை விட்டு வெளியேறி, பாண்டிச்சேரியில் தஞ்சம் புகுந்து. விட்டான். இதன் பின் 1918 நவம்பரில் அவன் பாண்டிச்சேரி எல்லையைத் தாண்டி வந்தபோது, பிரிட்டிஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டுப் பின்னர் விடுதலையானான். எனவே இந்த இரு நூல் களும் அவள் பாண்டிச்சேரியில் இருந்த காலத்திலேயே இயற்றப் பட்டு, அங்கிருந்தே வெளியிடப்பட்டன என்பதும் தெரிய வரும். மணியாச்சி ரயில் நிலையத்தில் ஆஷ் துரையைச் செங்கோட்டையைச் சேர்ந்த வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்ற தேதி. 1911 ஜூன் 17 ஆம்