பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. 33 இப்போது சிறையிடப்பட்டிருக்கும் பூபேந்திர நாதர் என்ற பிரமச்சாரி ஸ்வாமி விவேகானந்தரின் சொத்தச் சகோதரர். “ஸந்தியா' பத்திரா பதிராயிருந்து, வங்காளத்து சுதேசியஸ்தர்களுக்குள்ளே தலைமை வகித்து, அதிகாரிகள் கேஸ் கொண்டு வந்த சமயத்தில், அவர்கள் கைவசப்படாமல் பரகதி அடைந்தவரான பிரம பாந்தவரும் ஓர் சந்நியாசியே. இப்படி ஆயிரக் கணக்கான மகான்கள், இன்னும் நமது நாட்டிலே உழைத்து வருகிறார்கள்...' (பாரதி புதையல் - 2 ரா.சு. பத்மநாபன் தொகுப்பு. பக். 167-168). ஆனால், தமிழ்நாட்டில் தோன்றிய ரகசியச் சங்கத்தில் நாம் வேறு - பட்ட நிலைமையைக் கா37 முடிகிறது. ஆஷ்துரை கொலை வழக்கு : சம்பந்தமாக தடைபெற்ற திருநெல்வேலி சதி வழக்கில், அரசாங்கத் தரப்பில் முதல் எதிரியாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த நீலகண்டர் அய்யர் ஒரு பிரமச்சாரியே . அவர் தம்மை ' நீலகண்ட பிரமச் சாட்சி என்றே குறிப்பிட்டு வந்தார்; அவ்வாறு குறிப்பிடுவதிலும் பெருமைப் பட்டார் அவர். இவர் இறுதி வரையில் பிரம்மசாரியாகவே இருந்து, கர்நாடக மாநிலத்திலுள்ள நந்திமலையில் சாது ஓம்காரநாத் என்ற பெயரில் துறவியாக வாழ்ந்து அமரரானார். இதே வழக்கில் அரசாங்கத் தரப்பில் இரண்டாவது எதிரியாகக் குற்றம் சாட்டப் பட்டிருந்தவரும், வாஞ்சிநாதன் மணியாச்சி ரயில் நிலையத்தில் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற காலத்தில் வாஞ்சிநாதனோடு உடன் சென்றிருந்தவரும், மகாகவி பாரதியின் மனைவி செல்லம்மா வழியில் பாரதிக்கு உறவினரும், பாரதியின் பாண்டிச்சேரி வாசத்தின்போது பாரதியின் வீட்டில் தங்சியிருந்தவருமான சங்கரகிருஷ்ணனும் திருமணமாகாத பிரம்மச்சாரியாகவே இருந்தான், ஆனால், அதே சமயம் ஆஷ் துரையைச் சுட்டுக்கொன்று, தானும் தன்னுயிரை " மாய்த்துக் கொண்ட வாஞ்சி நாதன் திருமணமான இளைஞரவே இருந்தரர். அதே போல், இந்தக் கொலை வழக்கு சம்பந்தமாகத் தேடப்பட்டு வந்தவரும், வ. உ. சிதம்பரம் பிள்ளையின் தம்பிக்கைக்கு உரியவரும், போலீசில் அகப்படாமல்' பாண்டிச்சேரிக்குச் சென்று அங்கிருந்து கடல் கடந்து பினாங்குக்குச் சென்று விட்டதாகக் கருதப் படுபவருமான தூத்துக்குடி மாடசாமிப் பிள்ளையும், மற்றும் ஆஷ் கொலைவழக்கில் எதிரிகளாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்களில் பலரும் திருமணமானவர்களே : மேலும், பாண்டிச்சேரியில் வாஞ்சி நாதனுக்குத் துப்பாக்கி சுடக் கற்றுக் கொடுத்தவர் என்றும் ஆஷ் கொலையைத் திட்டமிட்டுக் கொடுத்தவன் சென்றும் கருதப்படுகின்ற