பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 வ.வே. சுப்பிரமணிய அய்யரும் திருமணமாகி இல்லறம் நடத்தி வந்தவரேயாவார். 'ஆறில் ஒரு பங்கில் அடங்கியுள்ள உண்மை . இந்த உண்மை களின் பின்னணியில் தான் நாம் பாரதி எழுதி யுள்ள 'ஆறில் ஒரு பங்கு' என்ற கதையில் உள்ளடங்கியுள்ள உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்; புரிந்து கொள்ள முடியும். இந்தச் சொற்பொழிவின் தொடக்கத்தில், 'ஆறில் ஒரு பங்கு' என்ற கதையின் சுருக்கத்தைக் கூறி, அதில் வரும் கதாநாயகனான கோபித்த ர" எஜன் என்ற வாலிபன், தான் 'வந்தே மாதா’ இயக்கத்தில் ஈடுபட்டுத் தேச சேவை செய்வதற்கு, தனது காதல் இடையூறாக இருப்பதாகக் கருதுவதையும், பின்னர் அவன் பிரம்மசரிய விரதம் ஏற்று வடநாடு செல்வதையும், அங்கு அஸ்வினி குமார தத்தர் என்ற வங்கதேச பக்தரைச் சந்தித்து, அவர் மூலம் தேச சேவை செய்ய வேண்டுமெனில் ஒருவன் பிரம்மசாரியாக இருந்தாக வேண்டிய அவசிய மில்லை. காதலித்துக் கருத்தொருமித்த இருவர் தமக்குள் திருமணம் - செய்து கொண்டு இருவருமே தேச சேவையில் ஈடுபடலாம். அதனால் தேச பாதாவுக்கு இரண்டு தொண்டர்கள் கிடைப்பார்கள் என்ற உபதேசத்தைப் பெற்று, தான் காதலித்த பெண்ணை மீண்டும் ஏற்றுக் கொள்வதையும் பார்த்தோம். பாரதி தன் கதையில் குறிப்பிட்டுள்ள அஸ்வினி குமார தத்தர் என்பவர் ஒன்றும் ஒரு கற்பனைப் பாத்திர - பல்ல. ஆங்கிலேய அரசாங்கம் 1908 டிசம்பர் 16-ஆம் தேதியன்று நாடு கடத்திய ஒன்பது வங்க தேசபக்தர்களில் அஸ்வினி குமார தத்தரும் ஒருவராவார். இவர்கள் அனைவரும் ஓராண்டுக் கழித்து 1910 பிப்ரவரி 10-ஆந் தேதியன்று விடுதலை செய்யப்பட்டனர். எனவே பாரதி கற்பனையையும் உண்மையையும் கலந்தே தன் கதையை எழுதியிருக்கிறான் என்பது தெளிவு. அந்த உண்மை என்ன ? தமிழ்நாட்டில் ஆயுதம் தாங்கிய போராட்டத்துக்காக ரகசியச் சங்கம் ஒன்றை அமைத்த, காலத்தில், இங்கும் அந்தச் சங்கத்தில் திருமணமாகாத , பிரம்மசாரிகளை மட்டுமே சேர்த்துக்கொள்ள, வேண்டுமா, அல்லது மன உறுதி படைத்தவர்களாயின் திருமண மானவர்களையும் சேர்த்துக் கொள்ளலாமா என்ற ஒரு சர்ச்சை, இந்தச் சங்கத்தைத் தோற்றுவித்தவர்கள் மத்தியில் தோன்றியிருக்க வேண்டும்