பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துள்ளது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எனும் உன்னதக் கொள் கைளை இந்திய மண்ணில் வேரூன்றச் செய்த பாரதியின் முயற்சி இப்பகுதிக்கண் எடுத்தாளப் பெற்றுள்ளது. பாரதியார் நூற்றாண்டு நினைவு அறக்கட்டளைச் சொற்பொழி வினை ஏற்படுத்துதற்கு நிதி கொடுத்துதவி ப.: தமிழக அரசிற்கு இவ் வேளை எனது நன்றியறிதலைப் புலப்படுத்தி மகிழ்கின்றேன், மேலும் தமிழ்த்துறையின் 60 ஆவது நிறைவுவிழா ஆண்டான இவ்வாண்டில் இச்சொற்பொழிவு நூலாக வெளிவருவது மிக்க மகிழ்ச்சியைத்தருகிறது. அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பல்துறை வளர்ச்சியிலும் குறிப்பாகத் தமிழ்த்துறை வளர்ச்சியிலும் நாளும் சிந்தை செலுத்தி வருகின்ற நமது பெருமைமிகு இணைவேந்தர் டாக்டர் எம். ஏ. எம். இராமசாமி அவர்கட்கும், பல்கலைக்கழகப் புகழைச் சிறக்கச்செய்வதில் கவனம் செலுத்திவரும் நமது சீர்மிகு துணைவேந்தர் பேராசிரியர் இராம. சேது நாராயணன் அவர்களுக்கும், தமிழ்த்துறையின் சார்பில் எனது உள்ளார்ந்த நன்றியறிதலைப் புலப்படுத்துகின்றேன். இந் நூலினை விரைவில் அச்சிற்குக் கொண்டுவரப் பெரிதும் முயன்ற தமிழ்த்துறை நூல் வெளியீட்டுப் பொறுப்பாளர், இணைப்பேராசிரியர், டாக்டர் வெ .பழநியப்பன் அவர்களும் பல்கலைக் கழகப் பதிப்புத்துறை பொறுப்பாளர் திரு. வெ. இலக்குமணன் அவர்களும் பாராட்டிற்கும் நன்றிக்கும் உரியவர்களாகின்றனர்,