பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை அண்ணாமலை 'உரசர் அமைத்த கலைக்கழக ம்) கண்ணாரக் கண்டு களித்து, தில்லைப் பதியுடையானான சிற்றம்பலதாதன் அல்லும் : பகலும் அகமகிழ்ந்து ஆடிக்கொண்டிருப்பதாக, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பாடிப் பரவசம் அடைந்த இந்த அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், தமிழ்நாட்டில் தமிழ்ப் பெருமகன் ஒருவரால் நிறுவப்பட்ட முதல் பல்கலைக் கழகத்தில், பல அறிஞர் பெருமக்களை ஈன்று புறந் தந்தும் உருவாக்கியும் வளர்த்தும் - வந்துள்ள இந்தப் பல்கலைக் கழகத்தில், அறக்கட்டளைச் சொற்பொழிவொன்றை நிகழ்த்தும் அரிய வாய்ப்பினை" எனக்களித்த பல்கலைக் கழகத்தின் ஆட்சிக் குழு வுக்கும், தமிழ்த்துறைக்கும் எனது இதயங்கனிந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். >> -- மேலும்; இலக்கியப் பணிபுரியும் உபாதையில் எனக்கு வழிகாட்டி களாகவும் உளிகாட்டிகளாகவும் விளங்கிய, விளங்கி வருகின்றவர் களில் ஒருவரான மகாகவி பாரதியின் நினைவால் நிறுவப்பட்டுள்ளன பாரதி நூற்றாண்டு நினைவு அறக்கட்டளையின் பேரால் என்னைச் சொற்பொழிவாற்ற அழைத்துள்ளமைக்கு நான் மிகுந்த மன மகிழ்ச்சி யையும் தெரிவித்துக்கொள்கிறேன், நாற்பதாண்டுகளுக்கும் மேற்பட்ட எனது இலக்கிய வாழ்வின் தொடக்க காலத்திலிருந்தே, இலக்கியம் பற்றிய எனது நோக்லக யும் எனது இலக்கியப் பணியின் போக்கையும் உருவாக்கி, என்னை வழி நடத்திச் சென்றதில், பாரதிக்கும் பெரு ம் பங்குண்டு. இதனால் நான் இலக்கிய வாழ்வை மேற்கொண்ட காலந்தொட்டி..,