பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூமியினும் பொறை மிக்குடையாள் பெரும் - புண்ணிய நெஞ்சினள் தாய் - எனில் தோமிழைப்பார் முன் நின்றிடுங்கால், கொடும் துர்க்கை ஏனையவள் தாய் (பாடல் 6} - - என்று நாட்டைத் துர்க்கையாகவும் உருவகித்துப் பாடுகிருன். இத்தகைய துர்க்கையான பாரதத்தாய், நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி நயம் புரிவாள் எங்கள் தாய்-அவர் அல்லவ ராயின் அவரை விழுங்கிப் பின் ' ஆனந்தக் கூத்திடுவாள் . (பாடல் 9) என்று கூறி, அவன் கொடுங்கோலரை வீழ்த்தி வெற்றி வாகை சூடவும் செய்வாள் என்றும் பாடுகிறான். மேலும், அவன் வேருெகு , பாட்டில், பாரதப் போரெனில் எளிதோ ? - விரல் பார் த்தன்கை வில்லிடை ஒளிர்வாள்; (மாரதர் கோடி வந்தாலும் - கணம். மாய்த்துக் குருதியில் திளைப்பான் ' (வெறிகொண்ட தாக்.! - பாடல் 5) : என்றும் பாடுகிறான். இங்கு அவன் பாரதப் போரைப் பாரத நாட்டின் விடுதலைப் போரோடு உவமித்து. போரின் முடிவில் அவள் விடுதலே பெற்று வெற்றி வாகை சூடுவாள் என்று உருவகித்தே 4மாடுகிஞன், இந்த உண்மையையும் நாம் கருத்தில் கொண்டால், பாரதப் போருக்குக் காரணமாகவிருந்த பாஞ்சாலிசபதத்தை, பாரதி ஏன் தனது கருப் பொருளாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டான் என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம். இந்த உண்மையை நாம் பாரதியின் பாஞ்சாலி சபதக் காவியத்திலும் காண முடியும். - தருமன் பாஞ்சாவீயைப் பந்தயப் பொருளாக வைத்துத் தோற்று விட்ட பின்னால், பிரபஞ்சமும் கடவுளர்களும்கூட நிலைகேட்டுத் திரிந்து போன தாக , 4.7 ரதி. பாடியுள்ளதை ' முன்னர்க் குறிப்பிட்டோம். அவ்வாறு நான்முகனார் தாவடைத்தும். தசமகட்குப் புத்தி கெட்டும், திருமாலின் அறிதுயில் ஆழ்ந்த துயிலாக மா றியும், சீதேவியின்