பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று ஆணையிட்டே அவள் சபதத்தைக் கூறத் தொடங்குவதாகப் பாரதி பாடுகிருன். இவ்வாறு பாஞ்சாலி சபதம் செய்து முடித்ததும், இந்தச் சபதம் வெற்றி பெறும் என்று வாழ்த்தித் தேவர்கள் பூமாரி பொழிந்ததாகவும், வானம் உறுமியதாகவும், பூமி அதிர்ந்ததாகவும், புயற்காற்று வீசியதாகவும், ஐம்பெரும் பூதங்களும் இறுதியில் தரு மனுக்கே வெற்றி எனச் சாட்சியுரைத்ததாகவும் பாடி , தா மும் கதையை முடித்தோம் - இந்த தாசி/லம் முற்றும் நவ்லின்பத்தில் வாழ்க ! (பாடல் - 308) என்று பாரதி தனது பாஞ்சாலி சபத நூலை முடிக்கிறான், - இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, பாரதி தனது 'பாஞ்சாலி சபத'த்தை இயற்றிய காலத்தில், நாட்டில் தியவிய அரசிடம் திலன் ! , நம்பிக்கை வறட்சியையும், சோர்வை ஃபும் பலர் மனத்திலும் ஏற்படுத்தியிருந்த அரசியல் சூழ் நிலையைக் கருத்தில் கொண்டு, தேசபக்தர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் 2தாக்கத்தையும் ... ற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் ஊட்டும் தோக்கத்தோடு, பாரத நாட்டின் நிலையைப் பாஞ்சாலியின் நிலையில் இனம் கண்டு, அவளுக்கு நேர்ந்த துன்பம் பாரதப் போரின் முடி கே) நீங்கியது போலவும், அவளது சபதம் நிறைவேறியதைப் பே.Tலவும், பாரத நாட்டின் அவல நிலை நீ ங் கி, பாரத தேச் பக்தர்கள் மேற்கொண்டிருந்த விடுதலைப் போர் இயக்கமும் வெற்றி பெறத்தான் செய்யும் என்பதை உணர்த்தும் விதத்திலும்தான் தனது 'பாஞ்சான் சபத'க் காவியத்தைப் பாடி முடித்திருக்கிறான் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம், இன்னும் சொல்லப் போனால், பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் பாஞ்சான் எடுத்துக்கொள் 15ரம் சபதமானது, தீவிரத் தேசியவாத இயக்கமும், இந்திய நாட்டுப் புரட்சி இயக்கமும் அடக்குமுறையினால் நிலைகுலைந்து போயிருந்த ஒரு தருணத்தில், அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சார்பிலும், நாட்டு மக்களின் சார்பிலும், பாரதியே எடுத்துக் கொள்ளும் சபதமேயாகும். இவையே பாஞ்சாலி சபதத்தில் குடி கொண்டுள்ள மறைபொருளாகும்.