பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்விகக் கூறுகள் 103 மாமகளைக் கொண்ட தேவன்-எங்கள் மரபுக்கு தேவன் கண்ணன் பதத்தாணை என்று கூறுவதனாலும், அருச்சுனன் சபதம் செய்யும்போது, தீர்த்தன் பெரும்புகழ் விஷ்ணு-எங்கள் சீரிய நண்பன் கண்ணன் கழலானண என்று உரைப்பதிலிருந்தும் இதனைத் தெளியலாம். பாரதியாருக்குப் பாஞ்சாலியே ஒரு தெய்வக் கூறாகத் தென்படுகின்றாள். விதுரன் வாய்மொழியாக 'தெய்வத் தவத்தி' என்றே பேசுகின்றார். இந்தக் கற்புக்கரசியைத் துரியோதனன் மன்றுக்கு அழைத்து வருமாறு சொல்ல நினைத்தவுடனே சகத்தில் அதர்மக் குழப்பம் உண்டான தாகப் பேசுகின்றார் கவிஞர். சக்தியே ஆட்டங்கண்டால் யார்தான் அதனை நிலை நிறுத்த முடியும்? கவிஞரின் வாக்கிலேயே அந்தக் குழப்ப நிலையைக் காண்போம்: தருமம் அழிவெய்திச் சத்தியமும் பொய்யாக பெருமை தவங்கள் பெயர்கெட்டு மண்ணாக வானத்து தேவர் வயிற்றிலே தீப்பாய மோன முனிவர் முறைகெட்டுத் தாமயங்க, வேதம் பொருளின்றி வெற்றுரையே யாகிவிட, நாதங் குலைந்து நடுமையின்றிப் பாழாக, கந்தருவ ரெல்லாம் களையிழக்கச் சித்தர் முதல் அந்தரத்து வாழ்வோரனைவோரும் பித்துறவே, நான்முகனார் நாவடைக்க நாமகட்குப் புத்தி செட வான்முகிலைப்போன்றதொரு வண்ணத்திருமாலும் அறிதுயில்போய் மற்றாங்கேஆழந்ததுயிலெய்திவிட, செறிதருநற் சீரழகு செல்வமெலாந் தானாகுஞ் சீதேவி தன்வதனம் செம்மைபோய்க் காரடைய, மாதேவன் யோகம் மதிமயக்க மாகிவிட