பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய நடை 117 மிக எளிய சொற்களைக் கையாண்டு எல்லோரும் எளி தாகப் படித்து இலக்கியச் சுவையை நுகரக் கூடிய முறையில் கற்பனை நிறைந்ததாயும், ஒசையின்பமும் ஒலிநயமும் மலிந்த தாயுமுள்ள கவிதையைப் படைப்பதில் பாரதிக்கு நிகர் பாரதியே என்றுதான் சொல்ல வேண்டும் 'சுவை புதிது, பொருள்புதிது, வளம்புதிது, சொற்புதிது சோதி மிக்க நவகவிதை எந்நாளும் அழியாத மாகவிதை' என்று தானே கூறும் புதிய கவிதைப் பாணியை அமைத்து வெற்றி கண்டவர் பாரதி. இதே கவிதையில், புவியனைத்தம் போற்றிடவான் புகழ்ப்டைத்துத் தமிழ்மொழியைப் புகழி லேற்றும் கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லை யெனும் வசையென்னாற் கழிந்த தன்றே. என்று பெருமிதத்துடன் கூறிக் கொள்ளுவது முக்காலும் உண்மை; வெறும் புகழ்ச்சி இல்லை. தன்னைப் புகழ்தலும் தரும் புலவோர்க்கே’’ என்ற பவணந்தியாரும் இதற்கு விதி வகுத்துத் தந்துள்ளா ரன்றோ? தக்க சந்தர்ப்பத்தில் புலவர்கள் தம் திறமையை - இருப்பதை - இல்லாததை அல்ல -எடுத்துக் கூறுவதில் என்ன தவறு? எல்லாம் அரசியல், எதிலும் அரசியல் சாதியும் கட்சியும்தான் எதற்கும் அளவு கோல் என்றிருக்கும் இக்காலத்தில் அறிஞர்கள் இவ்வாறு சொல்லி மகிழ்வதில் ஒருவித தற்காப்பு எந்திரத் தன்மை (Defence mechanism) Glassificul-G அவர்தம் மனம் நிலை குலையாமல் இருப்பதற்குத் துணை புரிகின்றது.

3. தனிப் பாடல்கள் வேங்கடேச ரெட்டப்ப பூபதி (2)-3. 4. நன் நூற்பா - 59