பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுகம் 3 இன்கவி பாடும் பரம கவிகளால் தன்கவி தான்தன்னைப் பாடுவி யாது.இன்று நன்கு வந்தென் னுடன்ஆக்கி என்னால்தன்னை வன்கவி பாடும்என் வைகுந்த நாதனே" என்பனபோன்ற பாசுரங்களால் வைகுந்த நாதனே தன்னுள் இருந்து கொண்டு தன்னைப் பாடி அப்பாசுரங்களை நம் மாழ்வார் பாசுரங்கள்’ என்று உலகோர் கருதுமாறு செய்து கொண்டான் என்று கூறுவதை நாம் அறிவோம். பாரதியா ரும் இதை நினைந்து பராசக்தியே தன்னுள் இருந்து கொண்டு பாடினாள் என்று கூறினாரோ என்று நினைக்கத் தோன்றுகின்றது. இன்னொரு பேராசிரியரின் கருத்தும் ஈண்டு நம் நினை விற்கு வருகின்றது. 'மகா கவிகள் எல்லோரும் தத்துவ போதனம் செய்யும் நோக்கத்துடன் காவியம் எழுதுகிறார் கள்; அவ்விதம் எழுதும்பொழுது கவிகளில் சிலர் ஒரே விஷயத்தை அதிக மாறுபாடில்லாமல் கூட எழு தி விடலாம் அவர்களுக்குத் தெரியாமலேயே ஒருவர் கூறிய விஷயத்திற் கும் மற்றொருவர் கூறிய விஷயத்திற்கும் நெருங்கிய ஒற்றுமை கூட ஏற்பட்டு விடலாம். அப்படி இருப்பினும் அவர்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் திருடி எழுதியதாகக் கருதுவது சரியல்ல. ஆனந்த வர்த்தனர் தமது த்வன் லோ கத்தில் மேதாவிகளின் மேதைத் தன்மை ஒன்றுக்கொன்று ஒத்திருக்கக்கூடும்." அதற்காக அவர்களிடம் குறை கூறுவது 5. டிெ. 7.9.5 6. Great men think alike arairp -g#3)aả *.jpg|ử gth நினைவிற்கு வருகின்றது.