பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 பாஞ்சாவி சபதம் என்ற பாடவில் அன்னங்கள் தடத்தின் ஊரல், தென்றல் வீசுதல் இவை இயக்கநிலை உருக்காட்சிகள் அளிமுரலுதல், கிளி மிழற்றுதல், குயில்கள் பாடுதல் இவை செவிப்புல உருக் காட்சிகள்; அன்னங்கள் பொற்கமலத்திருத்தல், அளி, கிளி, குயில்கள், காவினத்து நறு மலர்கள், பொன்னங்க மணி மடவார், வன்னங் கொள் வரைத்தோளார். இவை கட்புல உருக்காட்சிகள். இவை யாவும் கலந்து அமைந்து கவிதைக்குப் பொலிஆட்டுவதைப் பாடலைப் பன்முறைப் படித்து உருக் காட்சிகளை மனத்திற்குக் கொணர்ந்து அநுபவிக்கும்போது தெளிவாக அறியலாம். மந்திர கீதம் முழக்கினர் பார்ப்பனர்; வன்தடந் தோள்கொட்டி ஆர்த்தனர் மன்னவர் வெந்திறல் யானையும் தேரும் குதிரையும் வீதிகள் தோறும் ஒளிமிகச் செய்தன; வந்தியர் பாடினர்; வேசையர் ஆடினர்; வாத்தியம் கோடி வகையின் ஒலித்தன; பாண்டவர்கட்கு அத்தினபுரத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியினை வருணிக்கும் சொல்லோவியம் இது. இங்கு மந்திரகீத முழக்கம், தோள் கொட்டி ஆர்த்தல், வந்தியர் பாடுதல், வாத்தியம் ஒலித்தல் இவை செவிப்புல உருக் காட்சிகள்; யானை, தேர், குதிரை வீதிகள்தோறும் ஒளி செய்தல்-இது கட்புலஉருக்காட்சி; வேசையர் ஆடுதல் என்பது இயக்கப்புல உருக் காட்சி. இவை யாவும் கலந்த கலவை நிலை உருக்காட்சியாக நிகழ்ச்சியை மனத்தில் பதிக்கின்றன. ஆவியில் இனியவளை-உயிர்த் தணிசுமந் துலவிடு செய்யமுதை, ஒவியம் நிகர்த்தவளை-அரு ளொளியினைக் கற்பனைக் குயிரதனைத் 9. டிெ.1.29:156