பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 பாஞ்சாலி சபதம் எள்ளும் விழற்கிடமின்றி, மதியினும் விதி பெரிது, அம்பி னொத்த விழியாள், ஈயத்தைப் பொன்ளென்று காட்டுவார், புள்ளிச், சிறுமான் புலியைப்போய்ப் பாய்வது போல், பேய் கண்ட பிள்ளையென, ஆடி விலைப்பட்டதாதி, நெட்டை மரங்களென நின்றுபுலம்பினார், மின்செய் கதிர்விழி, பேயரசு செய்தால் பிணந் தின்னும் சாத்திரங்கள், அம்புபட்ட மான் போல், வம்பு மலர்க் கூந்தல், சினமான தீ அறிவைப் புகைத் தலாலே,-இச்சொற்றொடர்களில் பொதிந்துள்ள பல்வேறு வகை உருக்காட்சிகள் படிப்போர் மனத்தைக் கொள்ளை கொள்ளுகின்றன. இங்ஙனம் கவிதைகளில் வரும் உருக்காட்சிகளைப் புலன் கள் மீண்டும் மனத்தில் தோன்றச் செய்கின்றன. மனம் அக் காட்சிகளைக் கண்டு அநுபவிக்கின்றது. இத்தகைய முரு குணர்ச்சியைத் தம் முருகியல் நோக்கால் தம்முடைய கவி தைகளில் ஏற்றி வைக்கின்றனர் கவிஞர்கள். உலக இயல் பிற்குப் படம் போவிருக்கும் அவர்தம் கவிதைகளை நாம் பயிலுங்கால் அதே நோக்கை நாம் பயிற்சியால் ஒரளவு பெற்று விடுகின்றோம். கவிஞர்கள் உலகப் பொருள்களையும் உலகில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும் அநுபவித்த உணர்ச்சி சுவை வடிவமாக அவர்தம் கவிதைகளில் தேக்கி வைக்கப் பெற்றுள்ளது அக்கவிதைகளை நாம் பயிலுங்கால் அவற்றி லுள்ள சுவைகளில் நாம் தோய்ந்து வருகின்றோம். பாரதியாரின் பாஞ்சாவி சபதத்தைப் பயிலுங்கால் அருடைய முருகியல் அநுபவத்தை மானசீகமாகக் கண்டு மகிழலாம். நம்மிடமும் அந்நோக்கு எழுவதையும் உணர லாம். பாடல்கள் மம்மர் அறுக்கும் மருந்தாக நம்மைக் களிப்பூட்டுவதையும் காணலாம்.