பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியம் உணர்த்தும் உண்மை 133 சாதாரணமாகக் காணாத புலனுணர் ஆற்றலுடைய அழகு களையும் ஆழ்ந்த உண்மைகளையும் அது காட்டுகின்றது, நம்மில் ஒரு சிலருக்குக் கவிதையுணர்வும் உட்காட்சியும் (Insight) ஓரளவு அமைந்துள்ளன. ஆனால், இவர்களுள் பெரும்பாலோரிடம் இத்தகைய கவிதைத் திறன் சாதாரண வாழ்க்கையின் இருப்பு நிலைகளால் நெருக்குண்டு, அன்றாட வாழ்க்கையின் கூறுகளாகவுள்ள உலோகாயதக் கவர்ச்சி களால் குன்றச் செய்யப்பெற்று, சில சமயம் நனவு நிலை யிலும், அல்லது நனவிலி நிலையிலும் நசுக்கப் பெறுகின்றது. ஆனால், உண்மைக் கவிஞனிடம் உலகப் பொருள்களில் அழகினையும், ஆழ்ந்த உண்மைகளையும் காணுந்திறன் ஈடு எடுப்பற்ற அளவிலுள்ளது; அன்றியும், தாம் காண்பவற்றை யும் கேட்பவற்றையும் தெளிவாக வெளியிட்டுக் கூறுந் திறனும் அமைந்து கிடக்கின்றது. இவ்விளக்கத்தைப் படிக்கும் நம்முடைய கற்பனையும் ஒத்துணர்ச்சியும் துடிப்புப் பெற்று அவற்றை அக்கவிஞனுடன் சேர்ந்து காணவும் உணரவும் செய்துவிடுகின்றது. எனவே, கவிதை நமக்குக் கவிஞனின் உள் நோக்குடன் நாமாகவே வாழ்க்கையைக் கூர்ந்து நோக்கிப் பொருளுணரவும் கற்பிக்கின்றது என்றும், நம்முடைய பார்வையையும் ஒத்துணர்ச்சியையும் உரம் பெறச் செய் கின்றது என்றும் தெளிகின்றோம். காவியப் பண்பு : தலைவன் ஏவலாளர்க்குக் கூறுதல் போன்றவை அறநூல்கள் என்றும், நண்பர் ஒருவர்க்கொருவ கூறும் முறையில் அமைந்தவை புராணங்கள் என்றும், கணவனுக்கு மனைவி உரைப்பது போன்றவை காவியங்கள் என்றும் ஒருவகைப் பாகுபாடு செய்து உரைப்பர் வடமொழி வாணர்கள். இல்வாழ்க்கையில் சொற்களைவிட உள்ளத்து உணர்ச்சிகளே ஆற்றல் மிக்கவை என்பதும், சொற்களால் உணர்த்துவதைவிடக் குறிப்பால் உணர்த்துவதே மிகுதி என் பதும் நாம் அறிந்தவை. இக்காரணத்தால்தான் ஒரு சில