பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 34 பாஞ்சாலி சபதம் வரிகளாளான அகத்துறைச் சங்கப் பாடல்கள் உணர்ச்சியைக் கொட்டி நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்றன. இத்தகைய உணர்ச்சிதான் காவியங்களிலும் அமைந்து கிடக் கின்றது. ஒழுக்கம், அறம் முதலியவற்றை அதிகமாக நேரே கூறி வற்புறுத்தாமல் கற்பனையநுபவத்தின் வாயிலாகவும், கதை மாந்தர்களின் கூற்று வாயிலாகவும் அப்பாடல்கள் உள்ளத்தில் தாமே சென்று பதியும் முறையில் அமைந்து விடுகின்றன. இக்கருத்துகளின் அடிப்படையில் பாஞ்சாவி சபதம்’ உணர்த்தும் உண்மைகளைக் காண்போம். பொறாமையின் கேடு: துரியோதனனை நடுவாகவைத்து இந்த உண்மை விளக்கப்பெறுகின்றது. இராச சூயப் பெரு வேள்வியினால் பாண்டவர்கட்கு வந்த ஏற்றத்தைக் கண்டு துரியோதனன் மனம் புழுங்கி நைகின்றதைக் கவிஞர் பல பாடல்களில் (1.5:19-37) எடுத்துக்காட்டுகின்றார். எண்ணி லாத பொருட்குவையும், யாங்கனும் செலும் சக்கரமாண்பும் வார்கடல் பெருஞ்சேனையும் கொண்டு, இந்திர போங் களைத் துய்க்கும் வாய்ப்பிருந்தும், பாண்டவர் முடியுயர்த்தே-இந்தப் பார்மிசை யுலவிடு நாள்வரை, நான் ஆண்டதோர் அரசாமோ? -எனது ஆண்மையும் புகழுமோர் பொருளாமோ?* என்று எண்ணுகின்றான். வேள்வியினால் பாண்டவர்கட்குக் கிடைத்த பொருள்களையும், பெருமைகளையும், சிறப்பு களையும் எண்ணி எண்ணி ஏங்குகின்றான். நெஞ்சிற் கருதி யவற்றையெல்லாம் சகுனியிடம் (1.6:42-51) சொல்லுகின் றான். ஏந்திழையாள் (திரெளபதி) தன்னை நோக்கிச் சிரித்த தையும் கோடிட்டுக் காட்டி, 4. dire, 1.5.20