பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i46 பாஞ்சாலி சபதம் சிலர் இக் கொள்கையை யுடையவர்கள். 'கவிதையை ஆராயுங்கால், நம்முடைய முதற் கவனம் கவிஞன்பால் செல்ல வேண்டும்; அவனுடைய ஆளுமையிலும் அவன்; உலகைப் பற்றிக் கொண்டுள்ள மனப்பான்மையிலும் செல்ல வேண்டும்; வாழ்க்கையை எவ்வாறு நோக்கி விளக்கந் தருகின்றான் என்பதைக் கவனித்தல் வேண்டும். இது வெளிப்படையாககவும் இருக்கலாம்; குறிப்பாகவும் இத னைப் பெறவைக்கலாம். கலை,வடிவம், வரலாறு போன்ற செய்திகளில் நாம் எவ்வளவு ஆழ்ந்திருந்த போதிலும், மேற் கூறிய கவிதையின் முதனிலைக் கூறுகள் எவ்விதத்திலும் நம் பார்வையினின்று நழுவாமல் காக்க வேண்டும்" என்று ஆட்சன் கூறுவதை ஈண்டுச் சிந்திக்க வேண்டும். இது கருதியே கவிதையைப் பற்றிக் கூறவந்த தொல்காப்பியரும், இழுமென் மொழியால் விழுமியது துவலல்’’’ என்று கூறிப் போனார். தமிழ்க் கவிதைகள் பெரும்பாலும் அறங் கூறும் இயல்பும் கவிதை இயல்பும் கொண்டே திகழ் கின்றன. 25, Hudson, W.H. An Introdnction to the Study of Literature - uż.95. - 26. செய்யுளி. நூற் - 230 (இளம்)