பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுகம் 7 பாடல்களை முதன்முதலாகப் பாரதியார்தான் யாத்தார் என்று கூறுவது சிறிதும் பொருந்தாது. நல்ல தங்காள் கதை, அல்லி அரசாணி மாலை, பவளக் கொடி மாலை, ஏணி ஏற்றம் போன்றவைகளும், ஏற்றப் பாட்டு முதலான நாட்டுப் பாடல்களும் நூற்றாண்டுகட்கு முற்பட்டு எழுந்தவையாகும். மேலும், இராமலிங்க அடிகளின் திருவருட்பாக்கள், பட்டி னத்தார் பாடல்கள், தாயுமான அடிகளின் திருப்பாடல்கள், தேவாரப் பாடல்கள், ஆழ்வார்களின் திருப்பாசுரங்கள் ஆகிய அனைத்தும் கடுநடையின என்று எவரும் சொல்ல முடியாது. இந் நடையினை ஒரு புடையொத்த பாஞ்சாலி சபதத்தின் நடை எளிமையாகவும் சுருங்கிய சொற்களையும் கொண்டு இலங்குவதால் ஒரு முறை படிக்கும்போதே தெளிவாகி விடுகின்றது; நேரே மனத்தில் ஆழப் பதிந்து விடுகின்றது. இக்கால மக்கள் சுவைத்தற், கேற்பப் படைத்திருக்கும் பாரதியின் படைப்பு அருமையினும் அருமை. இதனைப் பல் வேறு கோணங்களில் ஆராய்ந்து இவ் வருமையைப் புலப் படுத்துவது இன்றியமையாததாகின்றது. ஆகவே, பயனுள்ள இவ்வாராய்ச்சியில் நம் பார்வையைச் செலுத்துவோம்.