பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் காவியங்கள் 9 (Blank verse) கையாளப்பெற்றிருப்பதையும், அதற்குப் பின்னர் எழுந்த காப்பியங்களில் பாவினங்கள் பயின்று வருவ தையும் காணலாம். சிந்தாமணிதான் விருத்த யாப்பில் தோன்றிய முதல் காப்பியம். அதனை யொட்டியே கம்ப ராமாயணம், பெரிய புராணம்போன்ற காப்பியங்கள் விருத்த யாப்பில் எழுந்தன. காப்பிய நடையில் எழுந்த தலபுராணங் களில் ஒன்றிரண்டைத் தவிர அனைத்தும் வெறும் செய்யுட் குவியல்களாகக் காட்சி அளிக்கின்றனவேயன்றி, அவற்றில் கவிதை நயமும் இல்லை; காப்பியச் சுவையும் இல்லை. கிறித்தவக் கவிஞர்களும் இஸ்லாமியப் புலவர்களும் இயற்றி யுள்ள காப்பியங்களில் ஒரளவு இவை நன்கு அமைந்துள்ளன. இவர்கள் யாவரும் பழைய முறையினையே கையாண்டுள்ள னர். சிந்தாமணிக்குப் பிறகு எழுந்த காப்பியங்கள் யாவும் அவற்றையே முன்மாதிரியாகக் கொண்டு யாக்கப்பட்டன. என்று கூறலாம். கலிங்க நாட்டுப் படையெடுப்பைப் பொரு ளாகக் கொண்டு தாழிசையால் எழுதப்பெற்ற முதற் காப் பியமான கலிங்கத்துப்பரணியை முன்மாதிரியாகக் கொண்டு பின்னர் எழுதப்பெற்ற பரணி நூல்கள் யாவும் அதனைப் போல் அவ்வளவு சிறப்பாக அமைய வில்லை. மேதாட்டுக் காப்பியப் பிரிவு: மேனாட்டார் காப்பியங் களை இரண்டு வகையாகப் பிரித்துள்ளனர். முதல் sucosapuś G35usā āstrīLouñésir (National or Authentic Epics) என்று குறிப்பிடுவர். பெரும்பாலும் இவை கவிஞனின் நாட்டைச் சார்ந்த ஒரு வீரனின் வீரச் செயல் களையும் வெற்றிச் சிறப்புகளையும் பற்றியே கூறிச்செல்லும். எண்ணற்ற கட்டுக் கதைகள் (Legends) அவ்வீரர்களைச் சுற்றி இயங்கும். கவிஞன் அவற்றிற்குத் தன் காவியத்தில் அழியாத் தன்மையை அளித்து அவற்றினைப் பாதுகாக்கின் றான். இவற்றிற்கு எடுத்துக் காட்டுகளாக இலியத் (Iliad),