பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியத்தில் - திரெளபதி 43 தால் அவர்கள் இவளைக் குறை கூறார்கள்; பிறரும் அந்நிலை யில் தான் இருந்தனர். இவள் தனி முதன்மை உள்ளவள். குறைபாடே இல்லாதவள். இவளைப் போன்றவர்கள் இவ ளுடன் தொடர்புள்ளவர்களால் மட்டுமன்றி எல்லாராலும் அன்பு காட்டப்பெறுகின்றனர்; இல்லை. மதிப்புடன் போற்றப் பெறுகின்றனர்; பூசனை செய்யப்பெறுகின்றனர். இவர்களிடம் இவ்வுலகம் தன்னுடைய நிறைவினையே காண் கின்றது. * சிலப்பதிகாரக் கண்ணகி திரெளபதியுடன் ஒப்பிடத் தக்க பாத்திரமாகின்றாள். டாக்டர் சி. ஆர். ரெட்டி மேலே குறிப்பிட்டபடி இருவருமே தனி முதன்மையுடையவர்கள்: குறைபாடே இல்லாதவர்கள். நம் எல்லாருடைய அன்புக் கும் பாத்திரர்களாகின்றனர். மதிப்புடன் போற்றப் படுகின்ற வர்களாகின்றனர்; பூசனைக்கும் உரியவர்களாகின்றனர். புகார்க் காண்டத்தில் கண்ணகியை மிக அமைதியான பெண்ணாகக் காண்கின்றோம். போதில் ஆர் திருவினாள் புகழ்உடை வடிவு என்றும் தீதுஇலா வடமினின் திறம்இவள் திறம்என்றும் மாதரார் தொழுது ஏத்த வயங்கிய பெருங் குணத்துக் காதலாள்" என்று இளங்கோ அடிகள் காட்டுவார். மதுரைக் காண்டத் திலும் ஆவேசமுற்ற சாலினி மூலம், 2. டாக்டர் சி. ஆர். ரெட்டி-பக். 49. 0 3. சிலப். 1. 1: 26-28