பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியத்தில் - திரெளபதி 4"| நாயகர் தாந்தம்மைத் தோற்றபின்-என்னை நல்கும் உரிமை அவர்க்கில்லை புலைத் தாயத்தி லேவிலைப் பட்டபின்,-என்ன சாத்திரத் தாலெனைத் தோற்றிட்டார்?. <ojällst தாயத்தி லேவிலைப் பட்டவர்; புவி தாங்குந் துருபதன் கன்னிநான் நிலை சாயப் புலைத்தொண்டு சார்ந்திட்டால்-பின்பு தாரமுடைமை அவர்க்குண் டோ?? மேலும் கூறுவாள். “கெளரவர் அவையில் அறங் கண்டவர் ஒருவரும் இல்லையா? மன்னர் நிலை மாறு முன்னர் சாத்திரம் கூடச் செத்து விட்டதா? புகழ் வாய்ந்த குரவர் களும் கல்வி கற்ற மன்னர்களும் செல்வத்தை வெளவுதலைத் தான் கண்டனரோ? என் மானம் அழிவதையும் காண்பார் களா? இன்பமும் துன்பமும் தனிப்பட்டோருக்கு மாறிமாறி வருவதைக் கண்டுள்ளோம். ஆனால் நேமியுருட்டிப் புவி யாளும் வேந்தர்கள் அறத்தின் மாட்சியைக் கொன்று களிப் பார்களோ? இதனை அன்பும் தவமும் சிறந்த அந்தணர்களும் கண்டு களிப்பார்களோ? அவர் முன்பு என் வினாவினை மீட்டும் வைத்து தெளிவுறக் கேட்டுவா?’’ தேர்ப்பாகனும் திரும்பி வந்து சபையை அடைந்து நிகழ்ந்ததைக் கூறினதுடன் அவள் மாதவிடாயிலிருப்பதையும் கு றிப்பிடுகின்றான். உடனே அரவக் கொடியோன் துச்சா தனனை நோக்கி, தம்பி, போகக் கடவை இப்போது அங்கே: இங்கு அப் பொற்றொடியோடும் வருக நீ என்று கூறவும் அவன் திரெளபதி இருக்கும் மாளிகையை அடைகின்றான். மைத்துனனைக் கண்டதும் தீண்டலை எண்ணி ஒதுங்குகின் 7. டிெ, 4. 59; 256.