பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 பாஞ்சாலி சபதம் றாள் அப் பொற்கொடி. அடி, எங்கே போகின்றாய்?’ என்று அவன் உரப்ப, இவளும் அவனை ஆண்டகையற்ற புலையன் என்று கருதி துணிவை வருவித்துக் கொண்டு “நீ வந்த செய்தியை விரைவில் சொல்லி நீங்குக' என்று கூற, அவனும் "மன்னர் கூடியிருக்கும் அவையில் உன்னைக் கூட்டி வருமாறு அண்ணன் சுயோதனன் பணித்தனன். ஏதும் சொல்லாது என்னோடு ஏகுவாய். பேடி மகன் பாகனுக்கு உரைத்த பேச்சுகள் வேண்டா' என உரைக்கின்றான். திரெளபதியின் நீண்ட கருங்குழலைத் துச்சாதனன் பற்றி இழுத்துச் சென்ற காட்சியும், அவள் அவையோரை நீதி கேட்டு அழுத காட்சியும் வீடுமனின் பேச்சும், அதற்குப் பாண்டவரின் தேவி, பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத் திரங்கள்! மாய முணராத மன்னவனைச் சூதாட வற்புறுத்திக் கேட்டதுதான் வஞ்சனையோ? நேர்மையோ? முற்படவே சூழ்ந்து முடித்ததொரு செய்கை யன்றோ? மண்டபம்நீர் கட்டியது மாநிலத்தைக் கொள்ள வன்றோ? பெண்டிர் தமையுடையீர்! பெண்க ளுடன் பிறந்தீர்! பெண் பாவ மன்றோ பெரியவசை கொள்ளீரோ? கண் பார்க்க வேண்டும்!" என்று துணிவுடன் தந்த மறு மொழியும் கன்னைஞ்சத்தை யும் உருக்கும் தன்மையுடயவை. இந்தக் கட்டத்தில் பாண்டியன் அவையில் நீதி கேட்டழுத கண்ணகியை ஒக்கின் றாள் பாஞ்சாலி. கதை நடந்த காலத்தில் நாமும் இருந் ததைப் போன்ற மனநிலை நம் மிடம் ஏற்படுகின்றது. காவியத் 8. டிெ. 5.65.81-88