பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

қу என்ற பட்டிக் காட்டானின் அநுபவம் ஏற்பட்டால்தான் படிப்போர் இக்காவியத்தைச் சுவைத்தவர்கள் ஆவார்கள். அப்படி அநுபவம் ஏற்பட்டவர்கள் எத்துணை பேர் இருக்க முடியும்? பல ஆண்டுகளாகப் பாஞ்சாலி சபதத்தைச் சுவைத்து மகிழ்ந்தவன் யான். நான் சுவைத்த முறைகளை யெல்லாம் -நான் பெற்ற அதுபவத்தை யெல்லாம்-பாரதியாரின் நூற் றாண்டில் எழுத்து வடிவத்தில் அமைக்க முயன்றுள்ளேன் என் முழு அநுபவமும் இந்த நூலில் வெளிவந்ததா என்பது ஐயமே ஏதோ முயன்றுள்ளேன். மாம்பழத்தின் சுவையை அதைப்பற்றிய கட்டுரையொன்றினைப் படித்து உண்' முடியாது. அந்த மாம்பழத்தைச் சுவைத்து மதிழ்ந்தால் தான் சவை முழுவதும் வெளிப்படும். அங்ங்னமே, இக்காவி யத்தை விருப்புடன் படித்துத் துய்ப்பவர்களே இதன் முழுதி அநுபவத்தைப் பெறுதல் இயலும். என் எழுத்து வடிவம் அச்சு வடிவம் பெறுமா என்ற ஐயம் அடிக்கடித் தோன்றிக் கொண்டே இருந்தது. ஒருவர் வெளியிட ஒப்புக் கொண்டார்; கொட்டுவாயில் கைவிரித் தார்; மற்றொருவர் என் கடிதத்திற்கு மெளனம்’ சாதித்து விட்டார். ஏதோ ஒரு நிமித்தத்தின்பொருட்டு மதுரை செல்லும் வாய்ப்பு இருந்தது. அன்னை மீனாட்சியின் தரி சனம் வாய்த்தது. அவள் அருளால் சர்வோதயம் தென் பட்டது. சர்வோதய இலக்கியப் பண்ணை இந்நூலை வெளியிட உவப்புடன் ஒப்புக் கொண்டது. பண்ணை யாருக்கு என் மனமுவந்த நன்றி என்றும் உரியது. இந்நூலை அழகுற அச்சிட்டு உதவிய நாவல் ஆர்ட் அச்சகத்தினருக்கு என் நன்றி கலந்த அன்பைப் புலப் படுத்திக் கொள்கின்றேன்.