பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+} ፳፻ இடம் பெற்ற போதிலும் பாரதியின் புலமையையோ காவியத் தின் சுவையையோ பெரும்பாலான மக்கள் உணர்ந்தவர் களாகத் தெரியவில்லை. சுமார் கால் நூற்றாண்டா” என் அரிய நண்பர் அமரர் திருஜே க சீத சாம் அவர்கள் இதனை ஒரங்கநாடகத்தை ஒருவரே நடிப்பதுபோல் பாடுகின்ற வாய் தேனு:றும் முறையில்-இலக்கிய ரஸ்ம் வாயினின்றும் சொட்டும் முறையில் பல்வேறு இடங்களில் பாடிப்பாடிப் பரப்பினாலும் அதனைக் கேட்கும் கூட்டம் அவ்வப்போது மகிழ்வதுடன் சுவை முடிந்து விடும்; அதன்பிறகு தொடர்ந்து ஒருவரும் சுவைப்பதில்லை; பிறரிடமும் எடுத்துக் கூறுவது மில்லை. கல்லூரி, பல்சலைக் கழகங்களில் கற்பிப்போரும் இதனைத் தக்க முறையில் பயிற்றுவதுமில்லை; பெரும் பாலான மானக்கர்கள் இதன் சுவையை உணர்ந்து துய்ப்ப தாகவும் தெரியவில்லை. "பாரதியும் பட்டிக் காட்டானும் என்ற கவிதையைப் படைத்த கவிமணியின் தொண்டு பாரதியாரைத் துய்ப்பதற்கு ஒருவழி காட்டியாக அமைந்துள்ளது என்பதற்கு இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது. பாஞ்சாலி சபதத்தைப் பண்ணோடு பாடினால் கேட்போர் கிறுகிறுத்துப் போவர்; அந்தக் கிறுக்கில் இலக்கியச் சுவையின் போதை ஏறுவதற்கும் குறையிராது; கள்வெறி கட்குடியர்களை மேலும் மேலும் கட்குடியில் கொண்டு செலுத்துவதுபோல் இந்தப் போதை' இலக்கியத்தை-குறிப்பாகப் பாரதியின் கவிதைகளை-அது பவித்துப் படிப்பதில் கொண்டு செலுத்தும் என்பதற்கு ஐய மில்லை. அன்னை "பாஞ்சாலி-சபதம்’ அறைதல் கேட்டேனடா! முன்னைக் கதையெல்லாம்-கண்ணின் முன்ந டந்ததடா!