பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 பாஞ்சாலி சபதம் ஐவர் தமக்கொர் தலைவனை-எங்கள் ஆட்சிக்கு வேர்வலி அ.தினை,-ஒரு தெய்வம்முன் னேநின் றெதிர்ப்பினும்-நின்று சீறி அடிக்கும் திறலனை, - நெடுங் கைவளர் யானை பலவற்றின்-வலி காட்டும் பெரும் புகழ் வீமன்" என்று காட்டுவர். விதுரன்மூலம் பெரிய தந்தை விடுத்த அழைப்பை ஏற்று, தருமன் அத்தினபுரம் செல்லத் தீர்மானித்து விடுகின்றான். பயணத்திற்கு ஆயத்தம் செய்யுமாறு வீமனைப் பணிக்கின் றான் தருமக் கோமான். இந்த ஆணையைக் கேட்ட வீமன் திகைத்துப் போகின்றான். காரணம், விதுரன் பேச்சிடையே மொழிந்திட்ட துரியோதனின் சூழ்ச்சிக் குறிப்பை உன்னிப் பாகக் கேட்டவனல்லவா? அருச்சுனனை நோக்கி ஆவேசத் துடன் பேசுகின்றான்: 'தம்பி, மாமனும் மருகனும் இணைந்து நம்மை அழித்திடக் கருதி இவ்வழியைத் தொடர் கின்றனர். தாமதம் வேண்டாம்; அண்ணன் சொல்லுவது 'தகும் தகும். நாம் படையுடன் செல்வோம். பார்த்தா, இந்தப் பகை இன்று நேற்று ஏற்பட்டதல்ல; இது நெடுநாட் பகை கண்டாய். இந்த நினைவிலேயே பல நாட்களைக் கழித்து விட்டேன். ஒரு கிருமியை அழிப்பதற்குக் காத்திருப் பார் உளரோ? கெடுவான் கேடு நினைப்பான். பாதகம் நினைப்பவர் அழியுங் காலம் நெருங்கி விட்டது. விடுநாண் கோத்திடுவாய். வில்லினுக்கும் சரியான இரை வாய்த்து விட்டது போர்க் கோலம் பூணுவோம். தந்தையும் மகனு மாக யாரிடம் தம் புலைமைகளை அவிழ்க்கின்றனர்? இவர் தம் அடாத செயலை எத்தனை நாள் பொறுப்பது? .م" 29. டிெ 3.45:236