பக்கம்:பாடகி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மங்களேஸ்வரி, க வர் ச் சி யா ன தோற்றமுடையவள்.

அவளது குரல்கூட மிகவும் இனிமையானது தான். மறவர் நாடு முழுதும் தே டி ன லும் மங்களேஸ்வரிக்கு இணையான ஒரு பெண்ணழகியைப் பார்க்க முடியாது செம்பிய நாட்டு மறவர் மண்ணுக்கு மன்னவகை வர இருக்கும் எ ன க் கு இல்லத்தரசி யாக வந்துவிடக்கூடிய சாத்தியக் கூறுகளெல்லாம் மங்களேஸ் வரிக்கு இருந்தும் குல விதிகள் குறுக்கே நின்று தடுத்து அவளே இக்கதிக்கு ஆளாக்கிவிட்டன.

பாவம்; நான் யார்ை பட்டத்து மகிஷியாக்கிக் கொள்ளத் துடித்தேனே, யார்மீது மையல் கொண்டு மதிமயங்கிக் கிடந் தேனே-அந்தச் சித்திரப் பா வை இன்று என் முன் குற்றக் கூண்டில் நிற்கிருள். இன்று அவளது எ தி ர் க | ல வாழ்க்கை அல்லது அவள் வாழப்போகிருளா, சாகப்போகிருளா என்கிற பிரச்சினை என்னுடைய தீர்ப்பில்தான் தொடுக்கிக் கொண்டி ருக்கிறது. பெண்களின் அழகு-சிலருக்கு அற்புத ஆயுதங்களாக அமைகின்றன; வேறு சிலருக்கோ, தங்களைத் தாங்களே தற் கொலை செய்து கொள்ளும் நச்சுக்கோப்பைகளாகவும் அமைந்து விடுகின்றன.

வழக்கில் பாரபட்சம் காட்டக் கூடாது என்பது சேதுபதி வம்சத்தினர் பின்பற்றிவரும் அ ழி யா த கொள்கை. யாராக இருந்தாலும்-குடிமக்களாக இருந்தாலும், அர ச வம்சத்தின ராக இருந்தாலும் குற்றவாளி தண்டிக்கப்பட்டே ஆகவேண் டும் என்பதுதான் இதுவரை சேதுபதிகள் அளித்து வந்திருக், கிற தீர்புக்களாகும். அதிலும் நான் மிகவும் கண்டிப்பானவன். என் மகளை வாழ வைக்கும் மருமகன் என்றுகூடப் பார்க்காமல், இராமேஸ்வரத்திற்கு வந்த வட இந்திய யாத்ரீகர்களைத் துன் புறுத்தின்ை என்பதற்காக அவனுக்கு மரண தண்டனை வழங் கியவன் நான், ஒரு மன்னன் அளிக்கும் நல்ல தீர்ப்பு அவன் புகழை நானுறு ஆண்டுகளாவது காப்பாற்றும் என்பது கிழ வன் சேதுபதியின் அருள்வாக்கு. அதனல்தான் சேதுபதி வம்சத்தில் யாரும் நீதி தவறுவதில்லை. சேதுபதிகள் கலைகளை ரசிப்பார்கள்; கானகத்தில் வேட்டையாடிக் குதுகலிப்பார்கள்.

118

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/119&oldid=698909" இலிருந்து மீள்விக்கப்பட்டது