பக்கம்:பாடகி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டிருக்கிறேன். அரச குடும்பத்தினரை மக்கள் ராச கோபுரங்களாக மதிப்பார்கள்; வணங்குவார்கள். இது சேது நாட்டின் வம்சாவழிப்பழக்கம். அப்படிப்பட்ட நாட்டில் இப் படி ஒரு வழக்கா? அதுவும் ஒரு அந்தப்புரப் பெண்ணிண் மீதா?

நான் என்ன செய்யப்போகிறேன் இந்த வழக்கில்?-எனக்கே குழப்பமாக இருக்கிறது. கு ரு தி ைய க் கொட்டி கமுதிக் கோட்டை, கொத்த ள ங் களை க் காத்த உறங்காப்புலியின் மானத்தைக் காக்கப் போகிறேன? கமுதிக்கோட்டையின் அதி பதியின் தர்ம பத்தினி நெறிதவறிவிட்டாள் என்று தீர்ப்புக் கூறி ஆப்பநாட்டு மறவர் வம்சத்திற்கே உலைவைக்கப் போகி றேன? கிழவன் சேதுபதியை என்மனத்தில் இறுத்திக் கொண்டு பெருமூச்சு விடுகிறேன். - -

போரில் தோற்றால் t ன் டு ம் ஜெயித்துக் கொள்ளலாம்; சொத்தை இழந்தால் உழைத்துச் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனல் குடும்பத்தலைவி க ற் பை இழந்துவிட்டாள் என்றால் உலகத்தில் அதற்கு ஏது பிராயச்சித்தம்? எத்தனை போர்களில் வென்று என்ன பய ன்? எண்ணற்ற கோட்டைகளைக் கைப் பற்றித்தான் யார் மதிக்கப் போ கிறார்கள்.

வழக்கு என் கவனத்திற்கு வந்த நாளிலிருந்து உறங்காப் புலி உணவு கொள்ளாமல் இருக்கிருராம். நீதிபதி ஸ்தானத் திலிருக்கும் நானே மாறுவேடத்தில் போய் அவருக்கு ஆறுதல் கூறுவது என்பது முறையான செயலாகுமா? எதற்கும் கலங் காத உறங்காப்புலி, சேதுநாட்டின் சேனதிபதிகளின் தலையாய சேனதிபதியாக விளங்கும் உறங்காப்புலி, வ ழ க் கு வந்தநாளி லிருந்து உளுத்தமரம்போல் கலகலத்துப் போனார் என்று நான் கேள்விப்படும் போது என் நெஞ்சம் துணுக்குறத்தர்ன் செய் கிறது. மனிதன் மகிழ்ச்சியோடு இருக்கும்போது தான் உறுதி யாகவும் பலமாகவும் இருக்கிருன். அவன் மனம் எந்தக்காரணத் திலாவது கலங்கிவிட்டால் அவனே கோழையாகிவிடுகிருன்.

உறங்காப்புலி வெறும் வீரன்மட்டும்மல்ல. சேதுபதியின் பெரிய அரண்மனையில் நன்கு பழகி நல்ல மதியூகங்களையும்

I20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/121&oldid=698912" இலிருந்து மீள்விக்கப்பட்டது