பக்கம்:பாடகி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றுக் கொண்டவர். அவருக்கு, தன் மனைவிமீது துரும்பளவு சந்தேகம் ஏற்பட்டிருந்தாலும் அவர் அவளே சம்ஹாரம் செய் திருப்பாரே! அப்பேர்ப்பட்ட மானஸ்தராயிற்றே உறங்காப் புலி! இப்படி ஒரு ஐயமும் என் உள்ளத்தில் எழாமல் இல்லை. மங்களேஸ்வரி தனக்குக்கிடைக்கவில்லை என்பதற்காக, அல்லது மங்களேஸ்வரியைக் குற்றவாளியாக்கிவிட்டால் கமுதிக் கோட்டையின் அ டு த் த வாரிசு தனக்குத்தான் கிடைக்கும் என்ற பேராசையில் கருத்த உடையார், மங்களேஸ்வரி மீது இப்படி ஒரு அவதுாறை ஏன் கிளப்பிவிட்டிருக்கக்கூடாது. இந் தச் சந்தேகமும் எ ன க் கு உண்டு. ஆனால், கருத் தடையார் கூறியிருக்கும் வழக்கில் ஆழமான சி ல உண்மைகள் இருப்பது போல் எனக்குத் ெத ரி வ த ா ல் நான் நிதானமாக வழக்கை விசாரிக்க ஆயத்தமாகியிருக்கிறேன்.

மங்களேஸ்வரி, - உறங்காப்புலிக்கு நான்காவது மனைவி. முதல் மூன்று மனைவிகளுக்கும் பிள்ளைப்பேறு இல்லாததால், நானகாவது மனே வியா க ம ன ந்து கொண்டார் உறங்காப்புலி சேர்வை. இதையே தான் குற்றச்சாட்டாகச் சொல்கிறார் கருத்த உடையார். முதல் மூன்று மனையாட்டி களுக்கும் பிள்ளைப்பேறு இல்லாதபோது மங்களேஸ்வரிக்கு மட்டும் எப்படி பி ள் ளே வந்தது என்பது தான் கருத்த உடையாரின் கே ள் வி ? தனக்கு வாரிசு இ ல் லா ம ல் போனல் தனக்குப் பிறகு நான் அதிபதியாகிவிடுவேனே என் பதற்காக மங்களேஸ்வரியை சோரம் போக வைத்து மகப் பேற்றை உண்டாக்கிக் கொண்டார் உறங்காப்புலி என்கிறார் கருத்த உடையார். இது அபாண்டமான குற்றச்சாட்டா அல் லது ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டா எ ன்று தீர்மானிக்க ராஜசபை பயப்படவில்லை. ஆனால் இப்படி ஒரு அசிங்கமான குற்றச்சாட்டு சேதுபதியின் அரசவையில்,அதுவும் அதிபதிகளின் வம்சத்திற்குள்ளேயே கிளம்பிவிட்டதே என்ற கூச்சம் மட்டும் என்னை அடிக்கடி அலைக்கழித்துக்கொண்டுதாணிருந்தது.

வழக்கு நடந்துகொண்டிருக்கும் போதே உறங்காப்புலி கவலையால் நோயுற்று மடிந்து விட்டார். அவர் மறைவு எனக்கு

121

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/122&oldid=698913" இலிருந்து மீள்விக்கப்பட்டது