பக்கம்:பாடகி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேலும் ஒரு சிக்கலை உருவாக்கிவிட்டது. மங்களேஸ்வரிக்கு குழந்தை பிறந்திருப்பதும் உறங்காப்புலி இறந்திருப்பதும் ஒரே மாதத்தில். நான் எதை நம்புவது? கருத்த உடையார் சொல் வதை நம்புவதா?அல்லது எனக்குக்கருத்தரித்த மாதத்தில்தான் என் கணவர் உறங்காப்புவி உ - ல் நலம் குன்றி படுக்கையில் விழுந்தார் என்று மங்களேஸ்வரி சொல்வதை நம்புவதா? முனி வர்கள் முள்ளில் தவமிருந்தார்கள் என்று கூறுவது இப்படிப் பட்ட தர்மசங்கடமான நேரங்களைத்தானே என்று கூட நான் நினைத்துக் கொண்டதுண்டு.

நான் கவலைப்பட்டதெல்லாம் - என்னுடைய தீர்ப்பு, யாரோ சிலரைத் திருப்திப்படுத்துவதாக மட்டும் அமைந்து விடக்கூடாது.ஆப்பநாட்டுக்கொண்டையன் கோட்டை மறவர் வம்சத்தையே நிலைகுலையச் செய்தால் கூட நான் கவலைப்பட போவதில்லை. ஆனல் தீர்ப்பு நல்ல தீர்ப்பாக இருக்கவேண்டும் என்பதுதான் என் பிரார்த்தன.

கருத்த உடையார் சேர்வை

உறங்காப்புலி இப்போதுதான் வகையாகச் சிக்கிக் கொண் டான். வாள்.எடுத்தால் அவனே வெல்ல யாராலும் முடியாது; மல்யுத்தம் என்றாலும் பீமனைப்போல் களத்தில் குதித்து எதிரி களின் உடலையே முறித்துவிடுவான். அப்பேர்ப்பட்ட உறங்காப் புலி சேர்வை, இப்போது அலைமோதிக் கொண்டிருக்கிருன். யானையையே கொல்லும் சிங்கம் அதன் காலில் சிறுமுள் தைத்து விட்டால் பலம்குன்றி, குகைக்குள்ளேயே கிடப்பதைப்போல் இன்றுஉறங்காப்புலி சேர்வை வீட்டைவிட்டுவெளியேற முடியா மல் தவிக்கிருன். வாள்கொண்டு, வேல்கொண்டு அவனால் எதிரி களே வீழ்த்த முடியும்.அவனுக்கு வியாதி வந்துவிட்டால் என்ன செய்வது? ஆம்; உறங்காப்புலிக்குத் தீராத மனவியாதி வந்து விட்டது. கொற்றவைைலும் குடும்பக் கவலைக்குத் தலைகுனிந்து தானே ஆக வேண்டும், -

122

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/123&oldid=698914" இலிருந்து மீள்விக்கப்பட்டது