பக்கம்:பாடகி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறங்காப்புலி சேர்வைக்கு மங்களேஸ்வரி நாலாவது மனைவி. முதல் மூன்று மனைவிகளுக்கும் புத்திர பாக்கியம் இல்லை. தனக்குப்பிறகு கமுதிக்கோட்டையைக் கட்டியாளும் வம்ச பாத் தியத்தை தனக்கு வேண்டுமே என்பதற்காக மங்களேஸ்வரியை நாலாவது மனைவியாக்கிக் கொண்டான் உறங்காப்புலி. முறைப் படி மங்களேஸ்வரி எனக்குக் கிடைக்க வேண்டியவள். நான் அவளுக்கு மாமன் மகன். அவள் எனக்கு முறைப்பெண். கமுதிக் கோட்டைக்கு அதிபதியே தன்மகளைப் பெண் கேட்கிருரே என்ற பவிசில் மங்களேஸ்வரியின் தகப்பன் முறைகளைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, மகளை உறங்காப்புலிக்குக் கொடுத்துவிட்டார். தனக்கு அரண்மண் வாசம் கிடைக்க வேண்டுமென்பதற்காக குலமுறைகளை மறந்தவள், வாரி சு உரிமைக்காக ஏன் தவறி நடந்திருக்கக் கூடாது? இதுதான் எனக்கு எழுந்த சந்தேகம். முதல் மூன்று மனைவிகளுக்குப் புத்திர பாக்கியம் இல்லாதபோது மங்களேஸ்வரிக்கு மட்டும் எப்.டி மகன் பிறப்பான்? நான் மட்டுமல்ல; ஆப்ப நாட்டு மறவர் வம் ச ேம இந்த விஷயத்தில்தானே திகைக்கிறது! நாட்டுக்கூட்டங்களிலும், சேனைகள் மத்தியிலும் ஏற்பட்டி ருக்கும் கிசுகிசுப்பு நெருப்பில்லாமல் புகையாது என்ற நாட்டு மொழிக்குச் சான்றாகவே இருந்தது. தக்க ஆதாரத்துடனேயே பட்டாளத்தினர் அடிக்கடி பேசிக்கொள்கிரு.ர்கள். யாரோ மதுரை நாயக்க மன்னருக்கு வேண்டிய இளைஞன் ஒருவன் அடிக்கடி கமுதிக் கோட்டைக்குள் போய் வந்து கொண்டிருக் கிருளும். அவனுக்கு உறங்காப்புலி சேர்வையிடம் அடங்காத மதிப்பாம். எதற்கும் ஒட்டுப்போட்டுப் பார்த்து உள்ளுக்குள் ளேயே சிரித்துக் கொள்ளும் மனித சமூகம் இவ்வளவு கிடைத் தால் விட்டுவிடுமா? அவ்வளவுதான் தக்க நேரத்தில் பக்க வாத்தியங்களோடு மங்களேஸ்வரியைப் பற்றி அசிங்கமாகப் பேசத் தலைப்பட்டார்கள். சேதுபதியின் கோட்டைகள் அனைத் திலும் பரவி இப்போது அது அவருடைய கொலுமண்டபத் திற்கே வந்துவிட்டது.

உறங்காப்புலி சேர்வை எனக்கு உறவினர்தான். அவருக்கு ஏற்படும் அவமானம் என்னேயும் சார்ந்ததுதான். ஆனல் அவர்

123

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/124&oldid=698915" இலிருந்து மீள்விக்கப்பட்டது