பக்கம்:பாடகி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனக்கிழைத்த கொடுமையை மறந்துவிட முடியுமா? கோட் டைக்கு அதிபதி என்பதற்காக எனக்குச் சேரவேண்டிய முறைப் பெண்ணை நான் இழக்க வேண்டுமா? மறவர் முறைப்படி பொறுப்புத்தொகை எனக்கு கட்டிவிட்டால் மங்களேஸ்வரி எனக்கு அத்தை மகள் இல்லாமல் போய்விடுவாளா? பழி தீர்த்துக் கொள்வது வே ன் டா த வேலைதான். ஆனல் பழி தீர்த்துக் கொள்ளாதவன் எப்போதாவது வீரனாக மதிக்கப்பட் டிருக்கிருன? சகித்துக்கொண்டே போவதுதான் வீரமென்றால் தென்னிந்தியாவில் பாளையக்காரர்கள் போர்க்களங்களையே அமைத்திருக்க மாட்டார்களே. ;

நான் நொந்துபோனவன். நான் காதலில் தோல்வி கண்டவன். என்னுடைய காதல் ஒருதலைக் காதலாக இருந்தால் கூட என்னைக் குறைகூறிக் கொள்ளலாம். நானும் விரும்பி னேன். மங்களேஸ்வரியும் விரும்பினள். கண்கள் பேசின. மான சீகமான மனத்தொடர்பும் இருந்தது மங்களேஸ்வரி எனக்குத் தான் என்று நாடே பேசியது இவ்வளவையும் அறிந்தும் கமுதிக்கோட்டைக்கு அதிபதி என்ற அகந்தையில் மங்களேஸ் வரியின் தந்தையை மிரட்டி அவளுக்கு மாலை சூட்டுகிருன் உறங்காப்புலி என்றால் ஒரு மானமறவன் பொறுத்துக் கொள் ளக்கூடிய செயலா இது? குழந்தையின் கையிலிருந்த சர்க்கரைக் கட்டியை வித்தை காட்டி அபகரித்துக் கொண்டதைப் போல எனக்கு வேண்டிய மங்களேஸ்வரியை உறங்காப்புலி மனைவி யாக்கிக் கொண்டது எந்த வகையில் நியாயம்?

தீமைகளை விளைவித்தவர் உறங்காப்புலி தானே; அதற் காக, மங்களேஸ்வரியின் மீது களங் கம் கற்பிப்பது என்ன நியாயம்; அ த ன ல் என்ன இலாபம்-என்று பலர் என்னைக் கேட்டார்கள். தங்க நகைசெய்யும் போது தட்டானுக்குக் கிடைக்கும் சேதாரம்போல மங்களேஸ்வரியின் கண்ணிரை நான் எனக்குச் சேதாரமாக எடுத்துக் கொள்கிறேன். படு களத்தில் குதித்துவிட்ட பிறகு பாட்டுக் கச்சேரியைப்பற்றி கவலைப்படுவது கொண்டையன் கோ ட் ைட மறவனுக்கு அழகல்ல.

124

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/125&oldid=698916" இலிருந்து மீள்விக்கப்பட்டது